அரசியல்தமிழகம்

இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது !

சென்னை கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் கடந்த 12ஆம் தேதி அதிமுக பிரமுகர் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பள்ளிக்கரணையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வீட்டுற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேனர் ஒன்று, அவர் மீது விழ சாலையில் தடுமாறி சாய்ந்துள்ளார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. அப்போது, சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. தங்கள் கட்சி தொண்டர்களுக்கு இதுபற்றி அறிவுரை வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

அரசு அதிகாரிகள் மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? எந்தவொரு உத்தரவையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. விதிமீறலில் ஈடுபட்ட, வீதிமீறலை தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதனை நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் தனித்தனியே அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரை பிடிக்க முடியவில்லை.

ஜெயகோபால், மேகநாதன், சங்கர், சுப்ரமணி, பழனி ஆகியோரை தீவிரமாக தேடி வருகிறோம். இதற்காக 2 தனிப்படைகள் அமைப்பட்டுள்ளன என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில், பேனர் வைக்க அனுமதித்த பள்ளிக்கரணை ஆய்வாளர், பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கடந்த 15 நாட்களாக தலைமறை இருந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button