“ பெப்சி ” புதிய தொடர் விரைவில்…
திரைப்பட தொழிலாளர்களின் தாய் வீடான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் “பெப்சி” பற்றியும் அதன் குழந்தைகளான இருபத்து மூன்று சங்கங்கள் பற்றியும் இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய தொடர் விரைவில் நமது நாற்காலி செய்தி மாதம் இருமுறை இதழில் வெளிவர இருக்கிறது.
திரைப்படங்கள் தயாராகி திரையரங்கிற்கு வருவதற்கு முன் அந்தப் படத்திற்கு உழைத்த தொழிலாளர்களின் உழைப்பின் முக்கியத்துவம் பெரும்பாலும் வெளியுலகிற்கு தெரிவதில்லை. ஒருபடம் உருவாக இருபத்து மூன்று சங்கங்களின் தொழிலாளர்கள் உழைக்கிறார்கள். அந்த தொழிலாளர்கள் ஒற்றுமையோடும், கட்டுப்பாடோடும் வழிநடத்த அவரவர் பணிசார்ந்த சங்கங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் ஆலோசனையின்படி தொழிலாளர்கள் பணிசெய்கிறார்கள்.
அரசியல் தலையீடு இல்லாத இந்த சங்கங்களை வழிநடத்தும் தலைமை அமைப்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) செயல்படுகிறது. உலக தொழிற்சங்களில் சாதி, மத, இன, அரசியல் கலக்காத ஒரே தொழிற்சங்கம் நமது பெப்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பெப்சி எப்போது எதற்காக உருவாக்கப்பட்டது. பெப்சியில் உள்ள ஒவ்வொரு சங்கத்தின் முக்கியத்துவம், சங்கங்களின் நிர்வாகிகளின் கடமை மற்றும் செயல்பாடு பற்றி விரிவாக புதிய தொடர் “பெப்சி” மற்றும் பெப்சியில் அங்கம் வகித்துள்ள இருபத்து மூன்று சங்கங்களின் ஒத்துழைப்போடு விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.