தமிழகம்

மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு : டோல்கேட்டில் காண்பித்த கார் பாஸ் எந்த எம்எல்ஏ உடையது?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருநெல்வேலியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்றில் 6பேர் கொண்ட கும்பல் பயணம் செய்தபோது சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கசாவடி கட்டணம் செலுத்துமாறு கூறிய போது ஊழியருக்கும் காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது காரை நிறுத்தாமல் சென்றதால் ஊழியர்கள் துரத்தியுள்ளனர். அப்போது காரில் வந்த அரியமங்கலத்தை சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞர் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஊழியர்களை மிரட்டும் விதமாக வானத்தை நோக்கியும் தரையிலும் சுட்டுள்ளார். அப்போது காரில் வந்தவர் 5பேர் தப்பிய நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய சசிகுமார் என்ற இளைஞர் அருகில் உள்ள தோட்டத்திற்குள் பதுங்கியதை பார்த்து அந்த பகுதியில் வந்த திருமங்கலம் எஸ்ஐ சுரேஷிடம் தகவல் சொல்ல அவரும் டோல்கேட் ஊழியர்களும் சேர்ந்து அவனை பிடித்து வந்து திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

துப்பாக்கி சூடு குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சசிகுமாரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி சூட்டில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. துப்பாக்கி சூடு குறித்தும், கார் பதிவெண் மற்றும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வந்தனர்.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 6பேரும் திருநெல்வேலி நீதிமன்றத்தில் குற்றவழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு திரும்பியுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய 5 பேரையும் பிடிக்க காவல் துறை கட்டுப்பாட்டு அறை மூலமாக மதுரையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உஷாரான போலீசார் மதுரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மதுரை & உசிலம்பட்டி சாலையில் உள்ள வாலாந்தூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் ஆட்டோவில் வந்த 6 பேரையும் விசாரித்தபோது டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என தெரியவந்தது. அப்போது திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர் உட்பட 6 பேரையும் பிடித்து வாலாந்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து பின்னர் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஓட்டி வந்த காரை அதே பகுதியில் கருமாத்தூர் அருகே காரை நிறுத்திவிட்டு ஆட்டோவில் தப்பி வந்ததாக தெரிவித்துள்ளனர்.

உசிலம்பட்டி சாலையில் உள்ள வாலாந்தூர் விலக்கு அருகே போலீசார் மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர். அவர்களிடம் மூன்று கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்பி மணிவண்ணன் திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையத்திற்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை ஒரு மணி நேரத்திற்குள்ளாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் குற்ற வழக்கு ஒன்றுக்காக திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தவர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் இதில் முக்கிய குற்றவாளியாக வேலூரைச் சேர்ந்த வசூல்ராஜா என்னூரை சேர்ந்த தனசேகரன் இருவரும் மிக முக்கியமான குற்றவாளிகளாக இருப்பது தெரியவந்துள்ளது.

குற்றவாளிகளிடம் இருந்து 4 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது எந்த ரகத்தை சேர்ந்தது என்பது பின்னர் தெரிய வரும் எனவும் குற்றவாளிகள் 6 பேர் மீதும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குற்றவாளிகளிடம் இருந்து நான்கு கைத்துப்பாக்கிகள் தோட்டாக்கள் 14 செல்போன்கள் 25000 பணம் அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் 45 பவுன் மற்றும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய காவலர்களை பாராட்டி ஐஜி சண்முக ராஜேஷ்வரன் சன்மானம் வழங்கினார். குற்றவாளியிடம் இருந்தது பிஸ்டல் ரக துப்பாக்கி எனவும் 18 தோட்டாக்கள் இருந்தது அதில் ஒரு தோட்டா மட்டும் சுட பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த துப்பாக்கி எங்கிருந்து யார் மூலமாக வாங்கப்பட்டது என்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் காரில் வந்தவர்கள் டோல்கேட் ஊழியர்களிடம் காண்பிக்கப்பட்ட எம்எல்ஏ பாஸ் யாருடையது என்று கேட்டதற்கு அது யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்த ஐஜி அதில் யாருடைய பெயரும் இல்லை என தெரிவித்துச் சென்றார். இருப்பினும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றவாளிகள் டோல்கேட்டில் காண்பித்த கார் அடையாள அட்டை எந்த எம்எல்ஏ உடையது என்பது சந்தேகத்திற்கிடமான நிலையிலுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் அரியமங்கலம் சசிகுமார், சென்னையை சேர்ந்த கார்த்திக்கேயன், வேலூர் வசூல் ராஜா, சென்னை ஹரிகிருஷ்ணன் எண்ணூரை சேர்ந்த தனசேகரன் உள்ளிட்ட 5 பேர் பிடிபட்டுள்ளனர். குற்றவாளிகள் தப்பிக்க உதவியதாக மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த ரெகுபதி மற்றும் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி இருவரையும் கைது செய்துள்ளதாகவும், திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

  • நீதிராஜ பாண்டியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button