பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.பி.எம் திட்டத்தை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் !

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியனேந்தல் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப்சிங். ஐ.ஏ.எஸ் அரியனேந் தல் ஊராட்சியில் எஸ்.பி.எம் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அணைத்து வீடுகளிலும் வீடு வீடாக குப்பைகளை வாங்கி அதை தரம் பிரிதல், திரவ கழிவு மேலாண்மைத் திட்டம் கழிவு நீர் வாய்க்கால், பைப் லைன் மூலம் கழிவு நீர் அப்புறப்படுத்தும் பணிகள், தனி நபர் இல்ல கழிப்பறைகள், சமுதாய சுகாதார வளாகம் பயன்பாடு ஆகியவற்றை பார்வையிட்டு நல்லமுறையில் செயல்படுத்தவும், பரமக்குடி ஒன்றியத்தில் உள்ள 39, ஊராட்சிகளிலும் எஸ்.பி.எம்,( தூய்மை பாரத இயக்கம் ) திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ. ஊ) உதவி பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.