பெண் மானபங்கம் !.? வன்கொடுமை !கோவையில் போலி பத்திரிகை ஆசிரியர் மகனுடன் கைது

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த அப்பநாயக்கன்பாளையத்தில் கணவனை பிரிந்து, மாற்றுத்திறனாளி மகனுடன் வசித்து வரும் வனஜா (36) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவர், குடும்ப வாழ்வாதாரத்திற்காக மாவு அரைத்து சாலையோர டிபன் கடைகளுக்கும், அப்பகுதியினருக்கும் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள வீட்டிற்கு மாவு கொடுத்து விட்டு வரும்போது, TN 37 DR 72 14 என்கிற எண் கொண்ட இருசக்கர சிகப்பு நிற புல்லட் வாகனத்தில், அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை வழிமறித்து, தனி ஒருவன் பத்திரிகையின் ஆசிரியர் நந்தகுமார் என்பவரின் மகன் அபிஷேக் என்பவர் தனது செல்போனிலிருந்து நந்தகுமாரிடம் பேசுமாறு போனை வனஜாவிடம் கொடுத்துள்ளார். போனில் பேசிய நந்தகுமார் நீதான் கள்ளச்சந்தையில் அரிசியை வாங்கி மாவு அரைத்து வீடு வீடாக கொடுத்து பணம் சம்பாதிக்கிராயா ? ஒரு லட்சம் பணம் கொடுத்து அனுப்பு, இல்லாவிட்டால், உன்னையும் உன் குடும்பத்தையும் போட்டோவுடன், தனி ஒருவன் பத்திரிகையில் செய்தி போட்டு கிழித்து விடுவேன் என மிரட்டி உள்ளார். அதற்கு அந்தப் பெண் அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன், போலீசிடம் புகார் கூறுவேன். என்னை விற்றால் ஐம்பதாயிரம் கூட தேறாது என்று கூறி இருக்கிறார்.

பின்னர் பேசிய நந்தகுமார் பணம் கொடுக்க முடியாதா ? தேவ.. கண்டாரோளி, பு… மகளே என எழுதமுடியாத வார்த்தைகளைப் பேசியதோடு, பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பிறகு அபிஷேக் உள்ளிட்ட இரண்டு நபர்களும் அதே பாணியில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு, அந்தப் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்குத் தெரிந்த நபர் ஒருவர் நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்துள்ளார். அவருக்கும் மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணின் வீட்டருகே வருவதும், போவதுமாக அந்த பெண்ணையே பின் தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் இருமுறை அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்டு நந்தகுமார் பணம் கேட்டு அனுப்பியதாகவும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில்தான் மேலே கூறப்பட்டுள்ள சம்பவங்களை புகாராக எழுதி, வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட துடியலூர் காவல்துறையினர், 136/2025 U/S 126(2), 296(b), 79,351(3), 308(3) BNS & 4 of TNPHW Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நந்தகுமார், அவரது மகன் அபிஷேக் ஆகியோரை கூடுதல் மகளீர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் காவல் துறையினர் விசாரணையில், கைதுசெய்யப்பட்ட நந்தகுமார் தனி ஒருவன் பத்திரிகையின் ஆசிரியரா என, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டபோது, வேறோர் பெயர் இருந்துள்ளது. இந்த பெயரை நந்தகுமார் எப்படி பயன்படுத்துகிறார் ? நந்தகுமாரின் மோசடிகளில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா ? என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் மீது கோவை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மாமுல் கேட்டு மிரட்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், இவர்கள் மீது எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற விபரத்தையும் சேகரித்து அனுப்ப மேல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
_கே.எம்.எஸ்