தமிழகம்

தமிழகத்தில் 358 தாலுகாக்களில் முற்றிலுமாக வற்றிவிட்ட நிலத்தடி நீர்

தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட எழுத்து பூர்வமான கேள்விக்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், தமிழகத்தில் 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 1139 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டதாக அவர் கூறினார்.
மேலும் 105 தாலுகாக்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளது என்ற அவர், 35 தாலுகாக்களில் நிலத்தடி நீரில் உப்பு சேர்ந்து முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டது என்றார்.

இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது எனவும் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தமிழக அரசு பிரதிநிதி, காவிரியில் ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரையும், ஜூலை மாதம் வழங்கப்பட வேண்டிய 31.24 டிஎம்சி நீரையும் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக பதில் அளித்த கர்நாடகா பிரதிநிதி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப் பொழிவு இல்லை. நாங்களே தண்ணீருக்காக கஷ்டப்படும் நிலை உள்ளது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேதாட்டு அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கர்நாடகா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாட்டு அணை குறித்து கர்நாடகா பேசக் கூடாது. மேதாட்டு விவகாரம் நீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் மீறும் வகையில் உள்ளது என்று தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.

மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தை அடுத்து வரும் காலத்தில் பெங்களூருவில் நடத்த வேண்டும். அப்போது தான் பெங்களூருவின் மழைப் பொழிவு, நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை தெளிவாக அறிய முடியும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா முறையாக வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மழைப் பொழிவு மற்றும் நீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு கர்நாடகா நீர் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மேகத்தாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. எந்தவொரு முடிவாக இருந்தாலும் அனைத்து மாநிலங்களின் முன்னிலையில், அனைத்து மாநில சம்மதத்துடன் தான் எடுக்கப்படும். கர்நாடகத்தில் கடந்த 20ம் தேதி வரை குறைந்த அளவிலேயே மழைப் பொழிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைப்பொழிவின் அடிப்படையில் நீர் வழங்குவதாக கர்நாடகம் உறுதி அளித்துள்ளது என்று ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் அவ்வபோது தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி நிவாரண நிதியை கேட்கவே இல்லை என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாகவும், 2018ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அரசிதழில் அறிவிப்பானை வெளியானது.

இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட வறட்சி நிவாரண நிதி தொடர்பான தகவல்களை கேட்டு தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தது.
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் வறட்சி நிவாரணம் என்று எந்த தொகையும் கோரப்படவில்லை என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் குறித்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை தொடர்ந்து மத்திய அரசு ஒரு குழு அமைத்து பாதிப்பின் தன்மையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யும். இந்த நடைமுறையை தான் அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. அண்மையில் தமிழகத்தில் கஜா புயல், ஓகி புயல் தாக்கியபோதும் தமிழக அரசு இதே நடைமுறையை பின்பற்றி இருந்தது.
ஆனால், வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கேட்கவே இல்லை என்ற தகவல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளிக்கையில், வறட்சிக்கு மத்திய வேளாண்துறை அமைச்சகம் நிவாரணம் வழங்குவது கிடையாது. தேசிய பேரிடர் நிதிநிலையில் இருந்து ஆண்டுக்கு இருமுறை நிதி வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முதற்கட்டமாக குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர்மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஜோலார்பேட்டை அருகே உள்ள மேட்டுச்சக்கரகுப்பம் என்ற இடத்தில் ஒகேனக்கல் காவிரி குடிநீர் திட்டத்தின் நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இது 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இங்கு பம்பிங் ஸ்டேஷன் அமைத்து நீரேற்றி பைப்லைன் மூலம் ஜோலார்பேட்டை ரயில்வே யார்டு அமைந்துள்ள பார்சம்பேட்டைக்கு கொண்டுவரப்பட்டு ரயில் டேங்கர்களில் நிரப்பி வில்லிவாக்கம் சுத்திகரிப்பு மையத்துக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் முதற்கட்டமாக மேட்டுச்சக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை வரை 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையோரம் குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. குழாய்கள் இறக்கும் பணி முடிவடைந்ததும் பைப்லைன் பொருத்தும் பணி தொடங்கும் என்றும் 3 நாட்களில் இந்தப்பணி நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே குழாய் அமைக்கும் இடங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் வரவழைக்கும் திட்டம் தொடர்பாக நிபந்தனைகளுடன் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரயில்வே சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தண்ணீரைக் கொண்டு வருவதற்கான கட்டண விவரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரைக் கொண்டு வருவதற்கான கலன்களை சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்கான செலவுகளை சென்னை குடிநீர் வாரியமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button