உடுமலை அருகே.. அமராவதிநகர் சைனிக் பள்ளியில் குடியரசு தினவிழாவில் கண்கவர் அணிவகுப்பு !

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 77வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கேப்டன் கே.மணிகண்டன் (IN), தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை நினைவு கூர்ந்தார். இந்தியா குடியரசு அடைந்து 77 வது ஆண்டில் பொருளாதாரம், ஆராய்ச்சி, அறிவியல், விவசாயம், மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் தேசத்தின் வளர்ச்சி குறித்து பேசினார்.

மேலும் நம் நாட்டின் 77 ஆண்டுகால வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான இலக்கை உணர்ந்து நடக்கவும் மாணவர்களிடம் அறிவுறித்தினார். முன்னதாக, பள்ளியின் அமர் நினைவுத்தூணிற்கு மலர்வளையம் வைத்து மரியாதையை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. கேப்டன் கே மணிகண்டன் (IN) முதல்வர், லெப்டினன்ட் கர்னல் கே தீபு (நிர்வாக அதிகாரி), லெப்டினன்ட் கர்னல் கௌஷோக் நந்தினி (துணை முதல்வர்) ஆகியோர் பள்ளியின் அமர் சக்கரத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இறுதியாக, பள்ளி பேண்ட் வாத்திய அணியுடன் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கண்கவர் துப்பாக்கி அணிவகுப்பு நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளித்தனர். நிகழ்வில் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




