கோவை மக்களின் அவசியம், அவசரம் உணர்ந்து செயல்படுவேன், மேயராக பொறுப்பேற்ற ரங்கநாயகி பேட்டி !
திமுகவின் அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சிகளின் அமோக ஆதரவுடன் ரங்கநாயகி வெற்றிபெற்ற நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நான் இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன்.
தற்போது என்னுடைய வார்டை பற்றித்தான் முழுமையாக தெரியும். இனி அனைவரிடமும் ஆலோசித்து எது அவசியம், எது அவசரம் என எல்லோருடைய சொல்லுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவேன் என்றார்.
மேலும் எனக்கு இந்த பதவியை அளித்த கலைஞருக்கும் முதல்வருக்கும், சின்னவர் அவருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும்,
அண்ணன் செந்தில் பாலாஜிக்கும்,துறை அமைச்சருக்கும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கும், திமுக செயலாளர்களூகும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், துணை மேயர் ஆணையாளர், கவுன்சிலர்களுக்கும் கட்சியின் உடன்பிறப்புகளுக்கும்,
அரசு துறைச் சார்ந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.