எழுத்துப் பிழையிடன் இயக்கப்பட்ட ரயில் ! தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி !

திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டித்து மத்திய ரயில்வே துறை உத்தரவிட்டது. இதனையடுத்து முதல் முறையாக ராமேஸ்வரத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி அமிர்தா விரைவு ரயில் சென்றது.

பரமக்குடி ரயில் நிலையம் வந்தபோது, அமிர்தா விரைவு ரயிலுக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பரமக்குடி நகர் மன்ற உறுப்பினர் சேது கருணாநிதி உட்பட பலர் அமிர்தா விரைவு ரயிலின் ஓட்டுனர்களுக்கு சால்வை அனுபவித்தும். இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

இந்த விரைவு ரயிலில் வண்டியின் பெயர் பலகையில் திருவனந்தபுரம் – ராமேஸ்வரம் – மதுரை என்பதற்கு பதிலாக தமிழில் மதுரை என இருக்க கூடிய அந்த இடத்தில் அர்த்தமில்லாத தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த ரயில் திருவனந்தபுரம் நோக்கி சென்றது.
முதன்முறையாக ராமேஸ்வரத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி இயக்கப்பட்ட விரைவு ரயிலில் தமிழ் எழுத்துக்கள் பிழைகளுடன் இயக்கப்பட்ட சம்பவம் தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது




