முதல்வர் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து வழிபாடு நடத்திய நடிகர் கைது !

முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது பணிகளை மருத்துவமனையில் இருந்தே தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முதல்வரின் பரிசோதனைகள், ஓய்வு குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்காக வேண்டிக்கொள்வதாக பலரும் வழிபாடுகள் நடத்தினர். அதேபோல் தற்போதும் சில பைத்தியங்கள் கிளம்பியுள்ளனர்.

சினிமா விழாக்களில் எந்த நடிகரின் படம் என்பதை தெரிந்துகொண்டு, அந்த நடிகரின் வேடமணிந்து புகழ்ந்து பேசுவதோடு, அந்த படக்குழுவினரிடம் பணம் பறிப்பதையே வாடிக்கையாக செய்து வந்தார். சில நாட்களாக சினிமா விழாக்களுக்கு இவரை யாரும் அழைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியில் இருந்து வந்துள்ளார். தற்போது கூல் சுரேஷ் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று, முதல்வரின் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து, சூடம் ஏற்றி, பூசணிக்காய் உடைத்த சம்பவம் திமுகவினர் மத்தியிலும், சினிமாத்துறையினர் மத்தியிலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அநாகரீகமான முறையில் முதல்வரின் புகைப்படத்திற்கு திலகமிட்டு வழிபாடு நடத்திய கூல் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




