“கனகு..” பெயரை சுருக்கி அதிகாரியை செல்லமாக அழைத்த திட்ட இயக்குநர் ! பல்லடம் அருகே கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு.. !

தமிழ்நாடு முழுவதும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகள் தோறும் கிராம சபா கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி சார்பில், கிராம சபா கூட்டம் சென்னிமலை பாளையம் அரசுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி திட்ட இயக்குநர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பாலு, ஒன்றிய கவுன்கிலர் ஆர். ஆர்.ரவி, வழக்கறிஞர் மகேஷ், உட்பட ஏராளமானோர் கலந்தூகொண்டனர்.

கூட்டத்தில் தங்களது பகுதியில் உள்ள குறைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் திட்ட இயக்குனரிடம் கொடுக்க முற்பட்டனர். அப்போது குறுக்கிட்ட திட்ட இயக்குனர் மலர்விழி உறுதிமொழி எடுத்த பிறகு மனு அளிக்கும்படி கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றாதது குறித்து கேள்வி எழுப்பியதோடு, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பெயர் குறிப்பிடாமல் ஊராசியில் சிலரின் தலையீடு அதிகரித்து காணப்படுவதால் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இதற்கு. பதில் அளித்த திட்ட இயக்குனர் வாரம் தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக கூறிவிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் கன்கராஜை பார்த்து ‘கனகு” பிளீஸ் என ஷாட் ஃபாமில் செல்லமாக ஆங்கிலத்தில் கூறினார்.

அனைவரும் இருக்கும் போது, மைக்கில் பொறுப்பான அதிகாரி பெயரை ஒருமையில் உயர் அதிகாரி பெயரை சுறுக்கி அழைத்த விதம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.