“மாமன்னனுக்கு” மங்களம் பாடிய இயக்குநர் சுந்தர் சி !

காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்துள்ள “கேங்கர்ஸ்” திரைப்படம் முப்பது கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பெருவாரியான வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 8.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சுந்தர் சி யின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தேம்பித் தேம்பி அழுதார். குஷ்பு அழுததின் உள்ளர்த்தம் இதுதான், அதாவது இதுவரை ஜனரஞ்சகமான படங்களை இயக்கிய சுந்தர் சி க்கு, இது படுதோல்வி படமாக அமைந்ததுதான் காரணம் என்கிறார்கள்.

மாமன்னன் படத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற வடிவேலுக்கு, கேங்கர்ஸ் திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையையே கேள்விக்குறியாக அமைந்துள்ளதாம். சமீபத்தில் மாமன்னன் படத்தின் மூலம், மாமன்னனாக வலம்வந்து, நன்றாகவே போய்க்கொண்டிருந்த எனது சினிமா வாழ்க்கையில், சுந்தர் சி யின் கேங்கர்ஸ் படத்தின் மூலம் என கேரியரையே கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார் எனது புலம்பி வருகிறாராம் வடிவேலு.
கேங்கர்ஸ் மூலம் சுந்தர் சி க்கு கல்லா நிரம்பியுள்ளது. ஆனால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.