மாநிலக் கல்வி கொள்கை… தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்… மிரட்டப்பட்ட பேராசிரியர்..!
தேசிய கல்விக்கொள்கை 2020 (என்இபி 2020)க்கு தமிழக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் என்இபி 2020ஐ மறுப்பதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசாங்கம், தமிழ்நாட்டுக்கு மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக உயர்மட்ட கமிட்டியை அமைத்தது. தமிழக மக்கள் மட்டுமல்லாது நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்கள் தமிழக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை மனதார வரவேற்றனர்.
ஆனால் இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்ட திட்டங்களை தமிழக அரசாங்கம் அமல்படுத்தத் தொடங்கியதுமே அதன் நோக்கம் தெரிந்துவிட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பும் எழுந்தது. தங்களது இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக திடீரென தமிழக கல்வி அமைச்சர்கள் ‘தேசிய கல்வி கொள்கையில் சில நல்ல அம்சங்கள்’ இருப்பதாக பேசத்தொடங்கினர்.
இந்தப் பின்னணியில் தமிழக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மாநிலக் கல்விக்கொள்கை வகுப்பதற்கான உயர்மட்ட கமிட்டியின் நடவடிக்கைகளில் அனைத்து நியதிகளையும் மீறி நேரடியாகவே தலையிட்டனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவில் போற்றப்படும் கல்வியாளரும் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கும் கமிட்டியின் உறுப்பினருமான பேராசிரியர் ஜவகர் நேசனை, தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றவாறு மாநில கல்விக் கொள்கையை வகுக்கவேண்டும் என்று மிரட்டினர் என்று செய்தி வருகிறது.
இது தமிழக மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகமாகும். இத்தகைய துரதிஷ்டவசமான சம்பவங்களை உயர்நிலைக் கமிட்டியின் தலைவர் மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியடையச் செய்கின்றன. இதனால் பேராசிரியர் ஜவகர் நேசன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமிட்டியிலிருந்து விலகியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்றவாறு மாநில கல்விக்கொள்கையை வகுப்பதென்ற இத்தகைய ஜனநாயகவிரோத சர்வாதிகார அணுகுமுறைக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்குமாறும், அனைவருக்குமான ஜனநாயகபூர்வ மதச்சார்பற்ற விஞ்ஞானபூர்வக் கல்வியை மக்களுக்கு வழங்குவதை உத்திரவாதப்படுத்தும் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு மாநில அரசாங்கத்தை நிர்பந்திக்கவேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எனத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன. மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000 ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு இதுவரை பணிநியமனம் செய்யவில்லை. தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த 10 ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப்பெறாததால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்களின் முந்தைய பணியையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, இருளில் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 2018ஆம் ஆண்டு சூலை மாதம் அதிமுக அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மற்றுமொரு நியமனப் போட்டித் தேர்வுமூலம் ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு முறையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு போராட்டங்கள் வலுத்தன. ஒரு பணிக்காக இருமுறை தேர்வு எழுத வேண்டிய கொடுமையை எதிர்த்து, ஆசிரியர்கள் நடத்திய தொடர்ப் போராட்டத்தையும் கடும் எதிர்ப்பினையும் மீறி முந்தைய அதிமுக அரசு, ஆசிரியப் பெருமக்களுக்கு மிகப்பெரிய தீங்கிழைத்தது.
ஆட்சிக்கு வந்தவுடன் மறுநியமனத் தேர்வு முறையை ரத்து செய்வோம் என்று வாக்குறுதியளித்து ஆசிரியப்பெருமக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் முழுமையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை நியாயமான அக்கோரிக்கையை நிறைவேற்றாது காலங்கடத்துவது, நம்பி வாக்களித்த ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும். அறிவுசார் தலைமுறையை உருவாக்கும் அறப்பணி புரியும் ஆசிரியர் பெருமக்களை அடிப்படை உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளி, முந்தைய அதிமுக அரசு கடைப்பிடித்த ஆசிரியர்களுக்கு எதிரானப்போக்கினை திமுக அரசும் தொடர்வது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, ஒரு பணிக்கு இருதேர்வுகள் எனும் மிகத்தவறான தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்வதோடு, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணி நியமனம் செய்வதற்கான புதிய அரசாணையை திமுக அரசு வெளியிட வேண்டும்.
தங்களின் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பெருமக்கள் சென்னை – டிபிஐ வளாகத்தில் முன்னெடுத்து வரும் அறப்போராட்டத்திற்கு அண்ணாமலை, சீமான் போன்றோர் ஆதரவு அளித்து வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடத்திய பேச்சு வார்த்தையின் மூலம் கைவிடப்பட்டுள்ளது.