ஆபாசமாக பேசிய அமைச்சர் மீது சமூக ஆர்வலர் புகார்

கடந்த 06.04.2025 ஞாயிறு அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் கதர் துறையின் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர் சைவமா ? வைணவமா ? என ஆபாசமாக பேசியது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொன்முடியின் பேச்சிற்கு கண்டனங்கள் வழுத்த நிலையில் திமுக வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீது பல்லடத்தில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் ஆ. அண்ணாதுரை பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். புகாரில் சமூக வலைதளங்களில் அமைச்சர் பொன்முடி சைவமா ? வைணவமா ? என விலைமாது கேட்டதாக இந்து மதத்தையும், பெண்களையும் கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், மேற்படி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பொன்முடி மீது சமூக ஆர்வலர் அண்ணாதுரையின் புகார் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.