மாவட்டம்
மக்கள் உரிமைகள் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனர் சபரியின் பிறந்தநாளை முன்னிட்டு பழனியில் உள்ள ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்குதல், பள்ளிகளில் மரக்கன்று நடுதல் மற்றும் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியியில் மக்கள் உரிமைகள் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
கா.சாதிக்பாட்ஷா