தமிழகம்

சிபிஐ, அமலாக்கத்துறை, சைபர் கிரைம் அதிகாரிகள் பெயரில் மோசடி ! இணையவழி குற்றவாளிகள் கைது !

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட  வேலப்பன்சாவடி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளரான மேரி ஜெனட் டெய்சி என்பரின் செல்போன் எண்ணிற்கு கடந்த வாரம் மும்பை சைபர் கிரைமிலிருந்து பேசுவதாக சிலர் தொடர்பு கொண்டுள்ளனர். அதாவது மேரி ஜெனட் டெய்சி பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டு அதன் மூலம் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறும், அதை RBI அதிகாரிகள் சோதனை செய்து, அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணம் முறையானதுதானா அல்லது மோசடியான பணமா என்பதை கண்டுபிடிப்பார்கள் என்று கூறியியுள்ளனர்.

பின்னர் மேரி ஜெனட் டெய்சி தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு 18.07.2024 ஆம் தேதி முதல் 22.07.2024 ஆம் தேதி வரை ரூ.38,16,971/- பணத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டுள்ளார். அதன்பிறகு தனது தவறை உணர்ந்து தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் ஆணையாளர் பிறப்பித்த உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளரின் வழிகாட்டுதலின்படி இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளரின் அறிவுறுத்தலின்படி இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் B.பிரவீன் குமார் தலைமையில் விசாரணை செய்ததில் ஏற்கனவே பிஜாய் என்பவரை கைது செய்துள்ளனர்.

மேற்படி மோசடி நபரை விசாரணை செய்ததில் சிபிஐ ஆபிசர், மும்பை சைபர் கிரைம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று மிரட்டியும், ஆன்லைன் ஷேர் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை என்ற பெயர்களில் பொதுமக்களை ஏமாற்றி பெறப்படும் பணத்தினை காசோலை மூலம் பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏஜண்டாக செயல்பட்ட MBA படித்து லாஜிஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே கமிசனுக்கு ஆசைப்பட்டு சட்ட விரோதகமாக ஏஜெண்டாக செயல்பட்ட மண்ணடியை சேர்ந்த முகமது இலியாஸ் மற்றும் அப்பணத்தை பெற்று வங்கிகள் மூலமாக அனுப்பி வந்த 9 ஆம் வகுப்பு படித்த, பர்மா பஜாரில் கடை நடத்தி வந்த அறந்தாங்கியை சேர்ந்த மலேசிய நபருக்காக வேலை பார்த்த சாதிக் பாட்சா என்பவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய டேப்-1. மூன்று செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணம் 46,22,690/- ஆகிவற்றை மோசடி நபர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். மேலும் கைது செய்த நபரகளை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

இணையவழி மோசடி புகாரில், துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட ஆவடி மாநகர காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

_கே .எம்.எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button