மிஷ்கின் தமிழ் சினிமாவின் “அநாகரிகம்” ! கண்டிக்காத பிரபலங்கள் !
ப. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெளிவந்துள்ள “பாட்டல் ராதா” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, மேடை நாகரீகம் இல்லாமல் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதோடு, இசையமைப்பாளர் இளையராஜாவை ஒருமையில் பேசிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது மேடைகளில் நாகரீகம் இல்லாமல் பேசுவதையும், தான் ஒரு அறிவாளி போல் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டவர் மிஷ்கின். சினிமாவில் இவருக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இல்லாததால், மிஷ்கின் உலருவதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மிஷ்கினை இதுவரை யாரும் கண்டிக்காததால் தலைக்கனம் அதிகரித்து எல்லோரையும் அவன் இவன் என ஒருமையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
பாட்டல் ராதா இசை வெளியீட்டு விழாவில், பிரபல இயக்குநர்கள் அமர்ந்திருக்கும் மேடையில், அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி தான்தோன்றித்தனமாக மிஷ்கின் பேசியதை யாரும் கண்டிக்காமல் கலைந்து சென்றது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மிஷ்கின் பேசும்போதே கண்டித்திருக்க வேண்டும், மிஷ்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நபர் இல்லை. அவரே குடிகாரன், திருடன் என பொது மேடையில் பேசி ஒத்துக்கொண்ட கேடுகெட்ட நபர் தானே ! அந்த இடத்திலேயே கண்டித்திருக்க வேண்டும் சினிமா சங்கங்களின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
சினிமா விழாக்களில் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அருவருப்பாக பேசிவரும் மிஷ்கினை, அவர் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை கண்டிக்காமல் இருப்பதும் வேடிக்கையாக உள்ளது.
– சூரியன்