குழந்தை பெற்றுக்கொள்ள துணை தேவையில்லை ! “காதலிக்க நேரமில்லை” படத்தின் திரைவிமர்சனம்
ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரவி மோகன், நித்யா மேனன், யோகிடுக்கிறார்க பாபு வினய், லால், ஜான் கொகேய்ன், லெட்சுமி ராமகிருஷ்ணன்,டி.ஜெ. பானு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “காதலிக்க நேரமில்லை”.
கதைப்படி.. பெங்களூரில் வசிக்கும் சித்தார்த் ( ரவி மோகன் ) மாடலிங் பெண்னை காதலிக்கிறார். திருமணத்திற்கு பிறகு குழந்தை வேண்டாம் என காதலியிடம் கூறுகிறார். இதற்கிடையில் நண்பர்களுடன் ஸ்பெர்ம் சென்டரில் வருங்கால தேவைக்காக ஸ்பொர்ம் கொடுத்து வைக்கிறார். பின்னர் சித்தார்த்துக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அந்த பெண் வராததால் நிச்சயதார்த்தம் நின்று போகிறது.
இதேபோல் சென்னையில் வசிக்கும் ஸ்ரேயா ( நித்யா மேனன் ) காதலினால் ஏமாற்றப்பட்டு வேதனையில் இருக்கிறார். ஆண் துணை இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஃபெர்ட்டிலிட்டி சென்டரில் ஸ்பெர்ம் டோனர் மூலம் தாயாகவும் ஆகிறார். தனது குழந்தையின் தந்தை யாராக இருக்கும் என டோனரின் முகவரியைத் தேடி செல்கிறார். அங்கு சித்தார்த், ஸ்ரேயா நண்பர்களாக ஆகிறார்கள்.
வெவ்வேறு எண்ணங்கள் கொண்ட இருவரும் நண்பர்களாக தொடர்ந்தார்களா ? காதலர்களாக இணைந்தார்களா ? என்பது மீதிக்கதை..
இன்றைய காலகட்டத்தில் நகர்புறங்களில் பெரும்பாலான இடங்களில் ஃபெர்ட்டிலிட்டி சென்டர்கள் அதிகமாக உருவாகிவருகிறது. துணை இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் சிங்கிள் பெற்றோர், வளர்ந்துவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என காலாச்சாரத்திற்கு மாற்றான சிக்கலான கதையை தேர்வுசெய்து, சுவாரஸ்யமாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆங்காங்கே சலிப்பு தட்டுகிறது. இருந்தாலும் பிரபல இயக்குநர்கள் யாரும் தொடாத இந்த சேனரை தேர்வு செய்வதற்கே தைரியம் வேண்டும்.
ரவி மோகன் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்வுசெய்து நடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள நித்யா மேனன் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் வினய், யோகி பாபு உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.