தமிழகம்

பைனான்ஸ் நிறுவனம் நடத்தி 10 கோடி ரூபாய் சுருட்டிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தையன், இவர் திருப்பூர் குமார் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து பி.என். ரோட்டில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகவட்டி கொடுப்பதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தார். இதனை நம்பி இவருடைய நிதி நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பணத்தை முதலீடு செய்தனர். ஒரு கட்டத்தில் உறுதி அளித்தபடி பணத்தை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நிறுவனத்தை பூட்டிவிட்டு குடும்பதுடன் தலைமறைவானார்கள்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகானந்தம் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 120-க்கும் மேற்பட்டவர்களிடம், அதிக வட்டி கொடுப்பதாக கூறி ரூ.10 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முத்தையன், அவருடைய மனைவி மஞ்சு, மகன் கிரண்குமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முத்தையன் (48), மனைவி மங்சு (47), மகன் கிரண்குமார் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 8லு பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். எத்தனை தான் ஏமாந்தாலும் திரும்ப திரும்ப அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்தவர்கள் இன்னமும் மோசடி நபர்களை நம்பிக்கிட்டுத்தான் இருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button