சென்னையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி கைது!
சென்னை குரோம்பேட்டையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூரிலிருந்து கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மகிந்திரா தார் வாகனத்தை இடித்து சேதப்படுத்தியது.
காரின் உரிமையாளரான சட்டக்கல்லூரி மாணவி ஷாலினி, அருகிலிருந்த கடைக்குச் சென்றிருந்தார். காரில் இருந்தவர்கள் பேருந்தை மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு வந்த ஷாலினி, தனது கணவருடன் சேர்ந்து நடத்துனர் அசோக்குமாரை தாக்கினார்.பாதிக்கப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நிஷிஜி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஷாலினி, அவரது கணவர் ரஞ்சித், நண்பர்கள் அஸ்வந்த் மற்றும் தீலீப் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் குரோம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை கையில் எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.