சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ராமேஸ்வரம் வரை ரயில் சேவை எப்போது?: பயணிகள் எதிர்பார்ப்பு
சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ராமேஸ்வரம் வரை அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மாவில் வணிகம் செய்து வந்த காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முயற்சியால் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை (திருவாரூரில் இருந்து சென்னைக்கு அதற்கு முன்பே ரயில் வழித்தடம் இருந்தது) 149 கி.மீ தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக் கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ரயில் நிலைய ங்கள் கட்டப்பட்டன.
1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி காரைக்குடி-சென்னை இடையே முதல் பயணியர் ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழித்தடத்தில் சென் னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கம்பன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விரைவு ரயில்களும், திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு பயணிகள் ரயில்களும் இயக்கப் பட்டன. இந்த ரயில்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கல்வி நிலைய ங்களுக்கு மாணவ, மாணவிகள் சென்று படித்து வந்தனர்.
இந்நிலையில் கால ஓட்டத்திற்கு ஏற்ப நாடு முழுதும் மீட்டர் கேஜ் ரயில் பாதை கள் அகலரயில்பாதைகளாக மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான 149 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் பாதை யை அகலப்பாதையாக மாற்ற கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.1400 கோடி நிதி தேவை என மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
இதில் முதல் கட்டமாக காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை மீட்டர் கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றவும், ரயில்நிலையங்களை மேம்படுத்தவும், பாலங்கள் அமைக்கவும் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி யைக் கொண்டு கடந்த 2012ம் ஆண்டு அகலப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ந் தேதி செயல் பாட்டுக்கு வந்த இந்த மீட்டர் கேஜ் ரயில்பாதையில், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி கடைசி ரயில் காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு சென்று தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை 4 கட்டங்களாக அகலரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் 14 பெரிய பாலங்கள், 255 சிறிய பாலங்கள், 32 லெவல் கிராசிங்குகள் மற்றும் அறந்தாங்கி, பேராவூரணி, அதிராம் பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலும், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலும் அகலரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரை 3 பிரிவுகளாக அகலரயில்பாதை பணிகள் நடைபெற்றன.
இந்த பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஏணைய பணிகள் நிறை வுற்று, இம்மாத இறுதிக்குள் திருவாரூர், காரைக்குடி இடையே ரயில் போக்கு வரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே சென்னை துணை பொது மேலாளர் மிஸ்ரா திருத்துறைப்பூண்டியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.ஏற்கனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே சோதனை அடிப்படையில் டெமு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. மக்களின் தேவைக்கு ஏற்ற நேரத்தில் இயக்கப்படாததால், மக்களின் வரவேற்பை பெறாத காரணத்தால் இந்த டெமு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலை உள்ளது.
எனவே காரைக்குடி முதல் திருவாரூர் வரை தேவையான பணியாளர்களை நியமனம் செய்வதோடு, மீட்டர் கேஜ் ரயில்பாதையில் இயக்கப்பட்டு வந்த திருவாரூர் காரைக்குடி பயணிகள் ரயில், சென்னை-ராமேஸ்வரம் கம்பன் விரைவு ரயில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இதுதவிர சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி அகலரயில்பாதையில் அதிக ரயில்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை-திருவாரூர்-பட்டுக்கோட்டை-அறந்தாங்கி-காரைக்குடி அகலரயில் பாதையில் கூடுதல் விரைவு ரயில்களை இயக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் வரதராஜன் கூறியது: திருவாரூர்-காரைக்குடி அகலரயில்பாதை பணி தாமதமாக முடிந்த நிலையில், விரைவில் ரயில்சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அறந்தாங்கி பகுதியில் இருந்து தினசரி நுலீற்றுக்கணக்கானவர;கள், சென்னைக்கு சென்று வருவதால், இரவு நேரத்தில் அறந்தாங்கியில் இருந்து சென்னை செல்வதற்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சிலவற்றை இந்த அகலரயில் பாதையில் இயக்கினால், இப்பகுதி மக்களுக்கு பயன்அளிப்பதோடு, திருச்சி அகலரயில்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதைப்போல சென்னையில் இருந்து ஏற்கனவே இயக்கப்பட்ட சென்னை- ராமேஸ்வரம் கம்பன் எக்ஸ்பிரஸ், திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயில்களையும் இயக்க வேண்டும் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்லூரி செல்லும் மாணவ, மாணவி களுக்கு வசதியாக கல்லூரி நேரத்திற்கு செல்லும் வகையில் குறைந்த தூர பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டும் என்றார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட அகல ரயில் பாதை பணி நிறைவடைந்த நிலையில் இப்பகுதிக்கு தேவையான எண்ணிக்கை யில் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் இதுகுறித்து அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் வரதராஜன் கூறியது:
திருவாரூர்-காரைக்குடி அகலரயில்பாதை பணி தாமதமாக முடிந்த நிலையில், விரைவில் ரயில்சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அறந்தாங்கி பகுதியில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கானவர்கள், சென்னைக்கு சென்று வருவதால், இரவு நேரத்தில் அறந்தாங்கியில் இருந்து சென்னை செல்வதற்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றார்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சிலவற்றை இந்த அகலரயில்பாதையில் இயக்கினால், இப்பகுதி மக்களுக்கு பயன்அளிப்பதோடு, திருச்சி அகலரயில்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இதே போல சென்னையில் இருந்து ஏற்கனவே இயக்கப்பட்ட சென்னை- ராமேஸ்வரம் கம்பன் எக்ஸ்பிரஸ், திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயில்களையும் இயக்க வேண்டும் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக கல்லூரி நேரத்திற்கு செல்லும் வகையில் குறைந்த தூர பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டும் என வரதராஜன் தெரிவித்தார்.