குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தீப்பற்றி எரிவதால்… மூச்சு திணறல் பாதிப்பு..!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அகத்தியர் நகர்
பகுதியில், பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு இரவு நேரங்களில் தீ வைக்கப்படுகிறது, இதனால் விடிய விடிய பகுதிவாசிகள் தூக்கமில்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எரியும் தீயை-யை கண்காணிக்கவும், தீயை அனைப்பதற்கும் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை . இதனால் அருகில் உள்ள காய்ந்த செடிகள் மரங்கள் திடீரென பற்றி எறிகிறது அதனை பொதுமக்கள் அணைத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த குப்பை புகையால் வயதானவர்களும், குழந்தைகளும், நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை வேறு இடத்தில் கொண்டு கொட்ட வேண்டும் மீண்டும் குப்பைகளை அப்பகுதியில் கொட்டினால் பேரூராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளைக் கொட்டி போராட்டம் செய்யப்போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.