அரசியல்தமிழகம்

குளம் தூர்வாரும் பணி… : மக்களின் பாராட்டு வெள்ளத்தில் அமைச்சர் சாமிநாதன்..!

தமிழக முதல்வர் எதிர்வரும் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வாரி நீரை சேமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனடியாக துரிதப்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஓன்றியத்தில் உள்ள சியாமளாபுரம் பேரூராட்சியில் உள்ள குளத்தின் தூர்வாரும் பணியினை நேரில் சென்று ஆய்வு செய்தார் செய்திதுறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை உடனடியாக தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் ஏரி, குளங்கள் அமைந்துள்ளதோ அந்த பகுதிகளில் நீர் வரும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி ஏரிகளுக்கும், குளங்களுக்கும் தண்ணீர் வரத்து வருமாறு உடனடியாக தூர்வாரும் பணிகளை துவங்க ஏற்பாடு செய்யுமாறு வட்டாச்சியர்களுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டதோடு எதிர் வரும் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க உடனடியாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

மேலும் ஆறுகள், ஏரிகள், குளங்களை தூர்வாரி மழைக்காலங்களில் வரும் நீரை சேமித்து வைத்தால் அருகில் உள்ள விவசாயிகளுக்கும், ஆடு, மாடுகளுக்கும் நீர்த்தேவையை பூர்த்தி செய்யலாம். கலைஞர் ஆட்சிக்காலத்தில் நட்டப்பட்ட மொரட்டுப்பாளையம் அணையை தூர்வாரி அதிக நீரை சேமித்து வைக்க உடனடியாக னணை அமைந்துள்ள பகுதியில் தூர்வாரும் பணிகள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கொங்கு மண்டலத்தின் பிரதான நொய்யல் ஆற்றில் கோவையிலிருந்து கரூர் காவிரி ஆற்றில் கலக்கும் வரை தடுப்பணைகளை ஏற்படுத்தி நீரை சேமிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் தமிழகம் முழுவதும் தூர்வாரும் பணீகளை செய்ததாக விளம்பரங்களை செய்தார்களே தவிர பணிகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் தூர்வாரும் பணிகளை செய்ததாக அரசு கஜானாவில் இருந்து பணத்தை மட்டும் எடுத்துள்ளதாக அப்போதே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அந்த அரசின் மீது வந்துள்ளது.

எதிர்வரும் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீர்வரத்துப் பகுதிகளை தூர்வாரி மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளையும், ஆடு மாடுகளின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தமிழக முதல்வரின் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பூர் மாவட்ட மக்கள் வரவேற்கிறார்கள்.

முதல்வரின் உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர்களுடன் உடனடியாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு துரிதமாக செயல்பட்ட செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும் பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சௌந்திரராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button