சிம்புவின் ‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் வீடியோ… : கொண்டாடும் ரசிகர்கள்
வெந்து தணிந்தது காடு படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை என்.கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிப்பெற்ற மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது. பத்து தல படத்துக்காக உடல் எடை அதிகரித்திருந்த சிம்பு தற்போது தனது அடுத்த படத்துக்காக மீண்டும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இந்த நிலையில் வாரிசு படத்தில் தீ தளபதி என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார். இதற்காக வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது பத்து தல இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து இந்த வீடியோவைப் பகிர்ந்து பத்து தல இசை வெளியீட்டு விழாவில் தளபதி என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.