இந்தியாவின் டாப் -10 தரவரிசை பட்டியலில் அமீரின் “உயிர் தமிழுக்கு” !
இயக்குனர் அமீர் நாயகனாக நடித்து மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கிய படம் “உயிர் தமிழுக்கு” இந்தப்படம் கடந்த மே மாதம் 10-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதும் பத்திரிகையாளர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் விமர்சனங்கள், பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆகையால் இப்படம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்திருந்தனர் தயாரிப்பு நிர்வாகத்தினர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான “ஒழுக்கம்” என்ற வார்த்தைக்கு ஐ.எஸ்.ஓ ( ISO ) தர சான்றிதழ் பெற்ற குடும்பத்தின் பின்புலமும், அவர்களது பச்சை நிற திரைப்பட தயாரிப்பு கம்பெனியும் இனைந்து, வெள்ளித்திரையில் “உயிர் தமிழுக்கு” படம் வெளியான திரையரங்குகளின் என்னிக்கையை குறைத்து, படத்தின் வெற்றியை தடுப்பதற்காக, அமிலம் பெயரில் உருவான படத்தை இடையில் வெளியிட வைத்தனர், அதில் ஒரளவு வெற்றியும் பெற்றார்கள்.
ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று எண்ணியிருந்த “உயிர் தமிழுக்கு” படக்குழுவினருக்கு ஆஹா மற்றும் அமேசான் ஓ.டி.டி ( OTT ) தளங்களில் படம் வெளியாகி இன்று இந்தியாவின் முதல் பத்து படங்களின் தரவரிசை பட்டியலின் டிரெடிங்கில் மக்கள் தீர்ப்பின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மண்ணில் புதைக்கப்பட்ட விதைகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பது போல், தரமான படைப்புகளுக்கு மக்கள் கொடுக்கும் அங்கீகாரத்தையும் யாராலும் தடுக்க முடியாது என்பதை “உயிர் தமிழுக்கு” படம் நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம்.