விமர்சனம்

கள்ளக்காதல் ஜோடிகள் தொடர்ந்து மர்ம மரணம், அதிர்ச்சியில் ஊர் மக்கள் ! “செவ்வாய்க்கிழமை” படத்தின் திரைவிமர்சனம்

தெலுங்கில் மங்களாபுரம் என்கிற பெயரில் வெளியான படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்து, அஜய் பூபதி இயக்கத்தில், பாயல் ராஜ்பூத், நந்திதா ஸ்வேதா, ஶ்ரீ தேஷ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “செவ்வாய்க்கிழமை”.

கதைப்படி… மங்களாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் ஊரில் உள்ள வீட்டின் சுவர்களில் ஆண், பெண் பெயர்களை குறிப்பிட்டு கள்ளத்தொடர்பு இருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. பின்னர் செவ்வாய்க்கிழமை அவர்கள் இருவரும் இறந்து கிடக்கின்றனர். இந்த சம்பவத்தை ஊர் மக்கள் பார்த்து சாமி குத்தம் இருக்குமோ என பேசிக்கொள்கிறார்கள்.

இதேபோல் அடுத்த செவ்வாய்க்கிழமையும் இருவர் மரணம் அடைந்து கிடக்கின்றனர். இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரியவர, காவல் உதவி ஆய்வாளர் ( நந்திதா ஸ்வேதா ) இறந்தவர்களின் உடலை உடற்கூறாய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் பல ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதால், கிராம மக்களால் கல்லால் அடித்து ஊரைவிட்டு துரத்தப்பட்டு இறந்து போன இளம்பெண் ஷைலஜா வின் ( பாயல் ராஜ்பூத் ) ஆவிதான் இந்த ஊரில் நடைபெறும் தொடர் மரணங்களுக்கு காரணமாக இருக்கலாம் என ஊர் மக்கள் நினைக்கின்றனர்.

கிராமத்தில் நடைபெறும் தொடர் மரணங்களுக்கு யார் காரணம் ? ஷைலஜா வாழ்க்கையில் என்ன நடந்தது ? அவர் எப்படி இறந்தார் என்பது மீதிக்கதை…

இந்தப் படத்தில் காம உணர்ச்சி ஒருவருக்கு அதிகமாக சுரப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கான தீர்வுகளையும் மிக அழகாக கையாண்டுள்ளார் இயக்குனர்.

வேசி கதாபாத்திரத்தில் இதுவரை யாரும் நடித்திராத விதத்தில், கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் பாயல் ராஜ்பூத். தன்னை மீறி உடலில் ஏற்படும் காம உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது போன்ற காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button