தமிழகம்

தனியாருக்கு சொந்தமான கோவிலை அபகரிக்க அதிகாரிகள் முயற்சி ! காவல்நிலையத்தில் புகார்

இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அருகே வளநாடு கிராமத்தில் உள்ள கருப்பபிள்ளை மடம் என்ற தனிநபரின் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அபகரிக்க முயற்சி செய்வதாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் பாலநமச்சிவாயன், இவரது பரம்பரைக்கு பாத்தியப்பட்ட கருப்பபிள்ளை மடம் என்ற முருகன் கோவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வளநாடு கிராமத்தில் உள்ளது. இக்கோவில் அருகே பாலநமச்சிவாயத்தின் தந்தை நாகலிங்கம் பிள்ளையின் சமாதி உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மூதாதையர் காலம் தொட்டு குடும்ப வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவில் முழுவதும் பாலநமச்சிவாயன் மற்றும் அவரது பரம்பரை குடும்ப உறுப்பினர்களின் சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இக்கோவிலை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்த முடியாமல் கோவிலில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் அரசு அதிகாரிகள் சொந்தம் கொண்டாடக்கூடாது என முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவிலை பூட்டி சாவியை எங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி வருகின்றனர். சாவியை ஒப்படைக்காவிட்டால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் என மிரட்டுகின்றனர். கோவில் அமைந்துள்ள இடம் கோவில் முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமானது. எனவே இக்கோயிலை அபகரிக்க முயற்சி செய்யும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

300 ஆண்டுகளாக தனிநபர் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலை அபகரிக்க முயற்சி செய்யும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button