உரிமம் பெறாமல் போலியாக தரமுத்திரை இட்டு நகைக் கடைகளுக்கு வழங்கிவந்த திருச்சி ஹால்மார்க் சென்டர் மோசடி !
சென்னை பிஐஎஸ் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் திருமதி.பவானி, திரு.விஷால், திரு.பாஸ்கர், உதவியாளர் ராஜ் மற்றும் நுகர்வோர் அமைப்பின் சார்பாக மோகன் ஆகிய என்னையும் அழைத்துச்சென்றனர்.
நீன்ட நேரம் தகவலை சேகரித்து சரியாக மதியம் 12 மணிக்கு திருச்சி ஜாபர்ஷா தெருவில் இயங்கிவரும் திருச்சி ஹால் மார்க்கிங் சென்டர் அலுவலகத்தில் நுழைந்து சோதனை செய்து விசாரித்ததில் உரிமம் பெறாமல் போலியாக பல நகை கடைகளுக்கு ஹால்மார்க் முத்திரை நகையில் முத்திரையிட்டு வியாபாரம் செய்தது ஆதாரபூர்வமாக பிடிபட்டது. உடனடியாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மூலம் உரிமையாளரை வரவழைத்து விசாரனை செய்ததில் அனைத்து தவறுகளையும் ஒப்புக்கொண்டார். ஹால் மார்க் டைரக்டர் திருமதி பவானி அவர்கள் தலைமையில் இணை இயக்குநர் திரு.விஷால் ஆகியோர் சட்டப்படி உரிமையாளர் ரவிக்குமார் ஊழியர்கள் சதீஷ், வெங்கடேஷ் உட்பட ஏழுபேர் மீது வழக்கு பதிவு செய்து இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இதற்கான பணிகளை விரைந்து செயல்பட்டு ஆவனங்களை சேகரித்த பாஸ்கர், ராஜ் அவர்களுடன் மோகன் ஆகிய நானும் இணைந்து பணியினை செய்ததில் பெருமை கொள்வதோடு சிறந்த அனுபவமும் எனக்கு கிடைத்தது. இந்த அனுபவம் நுகர்வோர் அமைப்பு சார்பாக மக்கள் மத்தியில் தங்க நகைப் பற்றிய விழிப்பணர்வு ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மிக திறமையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு மிகப்பெரிய மோசடியை கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்திய திருமதி.பவானி அவர்களின் பணியும் திரு விஷால் அவர்களின் பணியையும் எங்கள் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அதன் தலைவர் என்ற முறையிலும் தேசிய நுகர்வோர் அமைப்பு (சி.சிஐ.)தென்னிந்திய துணைத் தலைவர் என்ற முறையிலும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு (கேட்) துனைத் தலைவர் என்ற முறையிலும் பாராட்டுக்களை பதிவுசெய்கின்றேன்.
– மனிதவிடியல் பி.மோகன்.
9894859989