சினிமா

“ரம்மி விளம்பரம்” சரத்குமார் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் ? படவிழாவில் பிரபலங்கள் பேச்சு

ராகுல் இயக்கத்தில் ரேகா நாயர், மயில்சாமி ஆகிய இருவரும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள “விளம்பரம்” எனும் குறும்படக் குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளம்பரங்களில் நடிப்பவர்கள் சமூக அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும் என நடிகர் சரத்குமாருக்கு மறைமுகமாக சினிமா பிரபலங்கள் கண்டனக் குறல்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் இயக்குனர்கள் பேரரசு, உதயகுமார், சித்ரா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரபலங்கள் பேசும்போது… நடிகர், நடிகைகள் சினிமாவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு நடிக்கின்றனர். கற்பனை பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பது என்பது வேறு, விளம்பரங்களில் நடிக்கும் போது மக்களின் வாழ்வியலை சிதைக்கிறது. குறிப்பாக இன்று சந்தையில் விற்பனையாகும் அனைத்து பொருட்களும் விளம்பரங்கள் மூலம்தான் பிரபலப்படுத்தி விற்பனையை பெருக்குகிறார்கள்.

விளம்பரங்களில் நடிப்பவர்கள் அந்த விளம்பரத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து நடிக்க வேண்டும். சிட்பண்ட், ஆயில், சோப், ரியல் எஸ்டேட் என எண்ணற்ற விளம்பரங்களில் நடிகர், நடிகைகள் நடக்கின்றனர். இவர்கள் அந்தப் பொருட்களுக்கு விளம்பரப்படுத்தும் போது, மக்கள் இவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக அந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சில நாடுகளில் அந்த பொருட்கள் தரமற்றதாக தெரிய வந்ததும், அந்த நிறுவனத்தை நம்பி யாரும் பொருட்களை வாங்க வில்லை. விளம்பரத்தில் நடித்த நடிகர் நடிகைகளை நம்பித்தான் வாங்கினோம் என போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆகையால் நடிகர் நடிகைகள் விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பு அந்த பொருட்கள், நிறுவனங்களின் உண்மைத்தன்மையை அறிந்து நடிக்க வேண்டும் என பேசினர்.

குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கிறார். தமிழகமே ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், பணத்திற்காக மக்கள் மனநிலைக்கு எதிரான ரம்மி விளையாட்டை ஊக்கப் படுத்தும் வகையில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கிறார். இவர் அரசியல் வாதியும் கூட, இவருக்கு சமூக பொறுப்பு இருந்தால் நடித்திருப்பாரா ? என மறைமுகமாக சரத்குமாருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

படத்தின் கதையில் பாதிக்கப்பட்டவர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடித்த நடிகை மீது புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்வதுபோல் நடிகர் சரத்குமார் மீதும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் பேசிக்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button