விமர்சனம்

பிரசவ வலியை விட, குழந்தை கேட்பதை கொடுக்க முடியாமல் தவிக்கும் தந்தையின் வேதனை மோசமானதா ? “ராஜா மகள்” விமர்சனம்

ஹென்றி.ஐ இயக்கத்தில் ஆடுகளம் முருகதாஸ், ப்ராங்லின், பிரதிக் ஷா நடிப்பில் மார்ச் 17 ல் வெளியாகவுள்ள திரைப்படம் “ராஜா மகள்”

கதைப்படி… ஆடுகளம் முருகதாஸ் ( சுந்தரம் ), தன் மனைவி வசந்தி, மகள் கண்மணி ஆகியோருடன், சென்னையில் வாடகை வீட்டில் இருந்து கொண்டு, செல்போன் பழுதுபார்க்கும் கடை  வைத்திருக்கிறார். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு நடுத்தர வாழ்க்கை நடத்தி வருகிறார்.

சுந்தரம் தன் மகள் கண்மணி மீது அளவுகடந்த பாசம் செலுத்துகிறார். மகள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் மகளின் ஆசையை நிறைவேற்றுவதால், மகள் கண்மணியும் தந்தை மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். மகள் கண்மணியை தினசரி பள்ளிக்கு அழைத்துச் செல்வது, திரும்பவும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது, இடைப்பட்ட நேரத்தில் கடையை கவணிப்பது என மகளே உலகம் என சந்தோஷமாக நாட்களை நகர்த்தி வருகிறார் சுந்தரம்.

இந்நிலையில் கண்மணியிடன் படிக்கும் நண்பன் ஒருவன் அவனது பிறந்தநாள் விழாவிற்கு அனைவரையும் அழக்கிறான். கண்மணி தனது தாய், தந்தையிடன் கலந்து கொள்கிறாள். அந்த நண்பன் பணக்கார வீட்டுப் பையன் என்பதால் அவனது வீட்டைச் சுற்றிக் காட்டுவதாக அனைவரையும் அழைத்துச் சென்று தனது ஆடம்பரமான வாழ்க்கையை விவரிக்க கண்மணி வியந்து போகிறார்.

பின்னர் வீட்டிற்கு வந்ததும் தனது தந்தை சுந்தரத்திடம், தனது நண்பரின் வீட்டைப்போல் சொந்த வீடு வாங்கலாம் என்கிறார். அவரும் மகளின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் சரி என மகளுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். தந்தையின் மீதுள்ள நம்பிக்கையால் சில தினங்களில் வரவிருக்கும் தனது பிறந்தநாளை பங்களாவில் கொண்டாடலாம் என நண்பர்களிடம் கூறியதோடு, அந்த நாளை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் கனவில் மிதக்கிறாள் கண்மணி.

அதன்பிறகு மகள் கண்மணியின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சுந்தரம், வீடு வாங்கித் தருவதாக மகளுக்கு கொடுத்த நம்பிக்கையை நிறைவேற்றினாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…..

நடுத்தர குடும்பத்தில் ஏழு வயது பெண் குழந்தையின் தந்தையாக ஆடுகளம் முருகதாஸ் அற்புதமாக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். மகளின் ஆசையை நண்பர்களிடம் கூறி “பிரசவ வலியை விட குழந்தை கேட்பதை கொடுக்க முடியவில்லையே ! என  படுகிற வேதனை இருக்கே” என்று பேசும்போது அனைவரையும் கண்களங்க வைக்கிறார்.

அவருக்கு மகளாக நடித்துள்ள ப்ரதிக் ஷா இந்த இளம் வயதிலேயே இவ்வளவு நடிப்பை வெளிப்படுத்துகிறாரே ! என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அவருக்கு அம்மாவாக நடித்திருப்பவரும் குடும்பப் பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடுத்தர குடும்பத்தில் தந்தைக்கும், மக்களுக்குமான பாசப் போராட்டத்தை கதைக்களமாக தேர்வு செய்த இயக்குனர் ஹென்றி, திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சிறுவர், சிறுமிகளிடம் அற்புதமாக வேலை வாங்கியிருக்கிறார்.

படத்தில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இசை, ஒளிப்பதிவு சிறப்பு. எடிட்டர்கள் இரண்டுபேர் இருந்தும்,படத்தை இன்னும் “ஷார்ப்” பண்ணியிருக்கலாம்.

மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button