தமிழகம்

8 கோடி சொத்தை மோசடி செய்த அதிமுக பிரமுகர் !.?

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தின் முன்பாக தாயும் மகனும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, இவருக்கு தனலட்சுமி என்கிற மனைவியும், ராதா, யமுனா என இரு மகள்களும், சந்தோஷ் என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக பொன்னுசாமி உயிரிழந்துவிட்டார். பொன்னுசாமியின் மருத்துவ செலவுக்காக ராயர்பாளையத்தில் உள்ள சுமார் 8 கோடி மதிப்புள்ள இடத்தை நிரப்ப கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தமுடியாததால் கோவையை சேர்ந்த ஜெகதீஷ்வரன் என்பவர் மூலமாக பைனான்சியர் மோகன் என்பவரிடம் கடன் பெற வேண்டி பொன்னுசாமிக்கு சொந்தமான இடத்தை மீட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு தனலட்சுமி கிரையம் செய்துகொடுத்துள்ளனர். பின்னிட்டு மோகன் மேற்படி இடத்தை கரைப்புதூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோவிந்தராஜ் என்பவருக்கு விற்ப்பனை செய்துள்ளார். பின்னர் கோவிந்தராஜ் அந்த நிலத்தை வேறு ஒரு ஒருவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டே விற்றுவிட்டார்.

இதனிடையே இடத்தை விற்ற தனலட்சுமி தனக்கு பணத்தை தராமல் நிலத்தை கிரையம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் தெரிவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே 4 ஆண்டுகள் கடந்த நிலையில் தனலட்சுமியும் மகன் சந்தோஷும் கரைப்புதூர் ஊராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புகார் கொடுத்தால் விசாரிப்பதாக உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை, நீதித்துறையை நாடாமல் இது போன்று ஊராட்சி தலைவியின் குடும்பத்தை சந்தி சிரிக்க வைப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அவசரத்திற்கு கடன் வாங்கிவிட்டு, நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்தை போட்டுவிட்டு தற்போது சொத்துப்போச்சே என கூப்பாடு போட்டு என்ன பயன் ? 8 கோடி மதிப்புள்ள இடத்தை 15 லட்சத்திற்கு அடமானம் வைக்க வேண்டிய அவசியம் என்ன? 10 செண்ட் இடத்தை விற்றாலே மொத்த கடனையும் தீர்த்துவிடலாமே? என்னத்தான் மோசடி புகார் தெரிவித்தாலும் பத்திரப்பதிவின் போது பதிவாளர் கிரைய பணத்தை பெற்றுக்கொண்டீர்களா? முழு சம்மதமா? என தெளிவுபடுத்தித்தான் பத்திரப்பதிவு செய்வது வழக்கம்.

எனவே சட்டத்திற்கு தேவை சாட்சியும் ஆதாரங்களும் தான். வயதான காலத்தில் தனலட்சுமி போன்ற மூதாட்டியிடம் மோசடி செய்து சொத்தை அபகரித்திருப்பது போலீஸ் விசாரணையில் வெளிவந்தால் மேற்படி குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை விதிப்பதோடு சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button