தமிழகம்
வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ 79 லட்சம் மோசடி
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 40 பேரிடம் சுமார் 79 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக திருப்பூரைச் சேர்ந்த ஒருவரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கோயமுத்தூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் வலை வீசித் தேடி வருகின்றனர்.வெளிநாடு செல்ல திட்டமிட்ட அம்பலவாணன் என்பவரை அணுகிய நந்தகுமர் என்பவர், மெரிடியன் ஹாலிடேஸ் என்ற தமது நிறுவனம் மூலம் அழைத்துச் செல்வதாக பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதே போன்று கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஜமால் என்பவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நந்துகுமார் மற்றும் நிஜீஷ் சேவியர் உள்ளிட்ட சிலரைத் தேடி வருகின்றனர்.
-முத்துப்பாண்டி