தமிழகம்

30 குழந்தைகளுக்கு வாழ்வளித்த கிளாசிக் கிச்சன் நிறுவனம் !

தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற  வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம், தற்போது குழந்தைகளின் வாழ்க்கையையும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிளாசிக் கிச்சனின் 30-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, 30 குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் கல்வி உதவிகளை வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த 30 பயனாளிகளில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குழந்தைகள் ஆகியோர் உள்ளனர்.

கிளாசிக் கிச்சன் நிறுவனர் மற்றும் தலைவரான சுரேஷ் பாபு பாபுஜி கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் இணைந்து பயணித்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றார். இது ஒரு குடும்ப விழா போன்றது. 1992-ல் தனி ஆளாக இந்த நிறுவனத்தை நான்  தொடங்கினேன். கிளாசிக் கிச்சனில் இப்போது 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர், கட்டுமானம் மற்றும் இதர துறைகளில் கிளாசிக் கிச்சன் விரைவில் அடி எடுத்து வைக்கவுள்ளது என்று கூறினார்.

விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவரது மனைவி கிருத்திகா ராதாகிருஷ்ணன், திரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா சந்திரசேகர், சமையல் மன்னர்கள் தாமு மற்றும் ஆட்ரியன் லாம்பர்ட், நடிகர்கள் பெசன்ட் நகர் ரவி, அனுகீர்த்தி வாஸ், உடற்பயிற்சி நிபுணர் பரத் மற்றும் ஷில்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button