“ஷு” திரைப்பட விமர்சனம்
குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களை சுட்டிக்காட்டி சமூக அக்கறையுடன், கல்யாண் எழுதி இயக்கியுள்ள படம் “ஷு”.
கதைப்படி நடக்கப்போவதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் டைம் மிஷினை கண்டுபிடித்து தனது “ஷு” பொருத்தி வைக்கிறார் திலீபன். பின்னர் சோதனைக்காக பைக்கில் செல்லும்போது போலீஸ் அவரை துரத்துகிறது. அப்போது அந்த “ஷு” குப்பை மேட்டில் மறைத்து வைக்கிறார்.
அந்த ஊரில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகள் பிரியா என்கிற பெண் கடையில் இருக்கும் போது வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் யோகி பாபு ஒரு இத்துப்போன ஷு வை தைப்பதற்காக வருகிறார். பின்னர் மறுநாள் யோகி பாபு வந்து ஷு வை கேட்கும் போது ஷு வை காணவில்லை. இதற்கிடையில் குப்பை மேட்டில் மறைத்து வைத்திருந்த ஷு பிரியாவிடம் கிடைக்கிறது. அந்த ஷு வை யோகிபாபுவிடம் கொடுக்கிறார். அந்த ஷு வந்தவுடன் யோகிபாபு நினைத்ததெல்லாம் நடக்கிறது.
இந்நிலையில் ஒரு சமூக விரோத கும்பல் சிறுமிகளை கடத்தி டேங்கர் லாரி மூலமாக மலைப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர். அங்கு பணத்திற்காக சிறுமிகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துகிறார்கள்.
இதற்கிடையில் பிரியாவின் குடிகார தந்தை பணத்திற்காக கடத்தல் கும்பலிடம் விற்று விடுகிறான். அந்த சிறுமியும் சித்ரவதைக்கு உள்ளான சிறுமிகளோடு வந்து சேர்கிறாள். அது வரை அமைதியாக இருந்த அந்த சிறுமிகள் பிரியா கூறிய கதையை கேட்டதும் ஒன்று சேர்கிறார்கள். அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்கிறார்கள்.
சிறுமிகளை கடத்தி பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்திய கும்பலிடமிருந்து சிறுமிகள் காப்பாற்றப் பட்டார்களா ? சிறுமிகளின் நிலை என்னவானது ? என்பது மீதிக்கதை…..