ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் “மின்மினி” படக்குழு
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது ! தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித்தன்மையை திறமையை நிரூபித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநரகள் பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த மென்மையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை வென்றார். சில்லு கருப்பட்டி, ஏலே, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “புத்தம் புது காலை விடியாதா” என்ற ஆழமான உணர்ச்சிப்பூர்வமான படைப்பில் “லோனர்ஸ்” போன்ற அழகியல் ரீதியாக அவர் வழங்கிய கதைகள் நம்பிக்கையூட்டும் அணுகுமுறையுடன் நம்மை வசீகரிக்கின்றன.
இவரைப் பற்றிய இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில அவர் ஒரு நோக்கத்திற்காக அடுத்த கட்ட படப்பிடிப்பை 7 ஆண்டுகளாக துவங்க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. இது அவரது லட்சியத் திரைப்படமான ‘மின்மினி’ பற்றியது, அதன் படப்பிடிப்பு 7 ஆண்டுகளுக்கு முன்பு (2015)ல் தொடங்கப்பட்டது. குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதை. இதன் முதல் பகுதியை, அவர் 2015 ஆம் ஆண்டில், குழந்தை பருவ பகுதிகளை படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்து முதிர்ச்சியடைந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை விட்டுவிட்டார். இந்த நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், அவரது இந்த புது முயற்சி கோலிவுட்டில் மட்டுமின்றி மற்ற பிராந்திய திரைதுறையினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, அவர்கள் இந்த திரைப்படத்திற்கான அவரது முழுமையான உழைப்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பிரமிப்பில் உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா போன்ற திறமையான கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இக்குழுவில் பணியாற்றுகின்றனர், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டராக உள்ளார், இந்த கனவு திரைப்படம் உருவாக முழு முதல் காரணமாகவும், முழு ஆதரவாகவும் இருந்ததாக ஹலிதா கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார். இயற்கைச் சீற்றங்கள், நிதிச் சிக்கல்கள் போன்றவற்றால் சில படங்கள் முடங்கியுள்ளன, இடைநிறுத்தப்பட்டுள்ளன, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் ‘மின்மினி’ திரைப்படம் அப்படியல்லாமல் மிகவும் தீவிரமான திட்டமிடலுடன் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம். இதன் கதை முற்றிலும் இயற்கையானது மிகவும் யதார்த்தமானது.
மின்மினி படத்தில் எஸ்தர் அனில் (பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தவர்), பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஹலிதாவின் முந்தைய படமான “பூவரசம் பீப்பீ” படத்தில் பிரவீனும் கௌரவும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“மின்மினி” படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா Anchor Bay Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.