நிர்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி!
தன்னிடம் நிர்வாண புகைப்படங்களை கேட்ட நெட்டிசன் ஒருவருக்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பிரபல பின்னணி பாடகியான சின்மயி தொடர்ந்து பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ததற்கு எதிராக போராட்டம் நடத்தவும் சின்மயி அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில் சின்மயியிடம் சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் உங்களது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு குறுச்செய்தி அனுப்பியுள்ளார். இதற்கு சின்மயி பதிலும் அளித்துள்ளார். இந்த உரையாடல் பதிவை அவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், எனக்கு பிடித்த நிர்வாணப் புகைப்படங்கள் என்று கூறி சின்மயி சில லிப்ஸ்டிக் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
சின்மயியின் பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலியல் இச்சைகளுக்கு எதிராக பொதுவெளியில் குரல் கொடுத்து வரும் பிரபல பின்னணி பாடகியிடம் இளைஞர் ஒருவர் துணிச்சலாக இதுபோன்ற புகைப்படங்களை கேட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.