வெள்ளைக் காகிதம் தான் பில், நாள் ஒன்றுக்கு மருத்துவர் கட்டணம் 1500 ரூபாய் : பொதுமக்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் மா மலர் தனியார் மருத்துவமனை
எங்கயாவது உயர் தரமான சிகிச்சை அளிக்கபடுமா என்று கோணத்தில் பொதுமக்கள் தனியார் மருத்துவமனை நாடுகிறார்கள். இதை சாதமாக பயன்படுத்தி கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது தற்போது வாடிக்கை ஆகிவிட்டது.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மைய பகுதியான தெற்கு நான்காம் வீதியிலுள்ள “மாமலர் தனியார் மருத்துவமனை” சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் அதிக அளவில் கட்டணம் கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மேலும் இந்த தனியார் மருத்துவமனையில் அனைத்து உடலில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு எந்தவித ரசீதுகளை பில்லோ தருவதில்லை. மேலும் இதைப்பற்றி அங்கு வேலை செய்யும் மருத்துவ பணிப்பெண்களிடம் விசாரிக்கையில், எங்கள் மருத்துவமனையில் இப்படித்தான் ஆரம்பத்திலிருந்து கட்டணம் பெற்று வருகிறோம் என்றும் எங்களிடம் யார் ரசீதுகளை கேட்பதில்லை அலட்சியமாக பதில் கூறினார்கள்.
மேலும் ரசீது என்று கேட்டால் ஒரு வெள்ளை காகிதத்தில் மருத்துவர் கட்டணம், ஆக்சிஜன் கட்டணம், மருத்துவ பணிப்பெண்கள் கட்டணம், சிறப்பு கட்டணம் என்று கறாராக வசூல் செய்து கட்டணத்தை பெற்றுவிடுகிறார்கள். இந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவர் மாரிமுத்து ஒரு நாள் சிகிச்சை கட்டணம் 1,500 ரூபாய் வரை பெற்றுக் உள்ளார்.
உயர்தர சிகிச்சை என பொதுமக்கள் இந்த தனியார் மருத்துவமனையில் கட்டண கொள்ளையில் சிக்கி தவிக்கும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆகவே இந்த மாதிரி தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பணத்தை ஏமாந்து இழக்க வேண்டாம் என்று அறிவிறுத்தப்படுகிறது..