“LAST 6 HOURS”விமர்சனம் கொள்ளை கும்பலின் கொடூரமான செயலால் ஏற்படும்..,…
இளம்பெண் ஒருவர் தனியாக இருக்கும் போது, நான்கு பேர் மின்சாரத்தை துண்டித்து விட்டு வீட்டிற்குள் புகுந்து எதையோ தேடுகிறார்கள். அப்போது அந்தப் பெண் தனது கைபேசியில் வீடியோ எடுக்கிறார். அதை கொள்ளையர்களில் ஒருவன் பார்த்து அவளை நெருங்கும் போது துப்பாக்கி சூடு நடைபெறுகிறது. அப்போது சக கொள்ளையன் ஒருவன் இறந்து போன அந்த இளம்பெண்ணின் உடலில்…… அனுபவிக்கிறான். பின்னர் அந்த அறையில் டைம்பாம் வைத்து விட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.
பின்னர் வேறொரு பங்களாவில் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று கொள்ளையர்கள் மிகவும் நேர்த்தியாக லாக்கரில் உள்ள பொருளை கொள்ளையடித்து விட்டு தப்பிக்கிறார்கள். இதெல்லாம் போதாது, பெரிதாக ஏதாவது சம்பவம் செய்தால் தான் வாழ்கையில் நிம்மதியாக இருக்கலாம் என திட்டம் தீட்டுகிறார்கள்.
அதன்படி ஒரு காட்டு பங்களாவில் முப்பது கோடி இருப்பதாகவும், 6 மணி நேரத்திற்குள் அதை எடுத்துக் கொண்டு தப்பிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அந்த பங்களாவுக்குள் நுழைகிறது இந்த கும்பல். அங்கு கண் பார்வை இல்லாத கட்டு மஸ்தாதான உடல்வாகுடன் ஒருவர் ( பரத் ) இருக்கிறார். அப்போது சில சப்தங்களை கேட்டு துப்பாக்கியால் ஒருவனை சுட்டு வீழ்துகிறார் பரத். இதனால் மற்ற மூவருக்கும் பயம் தொற்றிக் கொள்கிறது.
கொள்ளையர்கள் குறிப்பிட்ட 6 மணி நேரத்திற்குள் பார்வையற்ற நபரை வீழ்த்தி பணத்தை எடுத்துச் சென்றார்களா? அல்லது பார்வையற்ற நபரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்களா ? பார்வையற்ற நபர் தனியாக காட்டு பங்களாவில் வசிக்க என்ன காரணம்? என்பது மீதிக்கதை.
இந்த படத்தில் நடிகர் பரத் கண்பார்வை இல்லாத இளைஞராக அற்புதமாக நடித்திருக்கிறார். பரத் வசிக்கும் காட்டு பங்களாவில் நடைபெறும் அனைத்து காட்சிகளும் விறுவிறுப்பாகவும், த்ரிலிங்காகவும் நகர்கிறது. மிகவும் குறைவான நடிகர்கள் நடித்திருந்தாலும், அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையும் கதை களமும் நேர்த்தியாக உள்ளது.