நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் “தக்ஸ்” படப்பிடிப்பு நிறைவு

நடன இயக்குனரும், இயக்குனருமான பிருந்தா இயக்கத்தில் தயாராகி வரும் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘தக்ஸ்’ எனும் படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
குமரி மாவட்டத்தைக் கதையின் பின்னணி களமாக கொண்டிருந்தாலும், இப்படத்தின் படபிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி என பல்வேறு இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஆக்சன் படமான ‘தக்ஸ்’ படத்தின் டைட்டில், கடந்த ஜுன் 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டு, படபிடிப்பு தொடங்கியது. நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நட்ப கலைஞர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் ‘தக்ஸ்’ படத்தின் படபிடிப்பு திட்டமிட்டப்படி ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. படபிடிப்பு நிறைவடைந்திருப்பதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தக்ஸ்’ படத்தின் டைட்டில் வெளியானவுடன், இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பினை எகிற வைத்தது- இதனையடுத்து படக்குழுவினரும் திட்டமிட்டப்படி மூன்று மாத காலத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக ‘தக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸருக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.