தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜெ.கே.ரித்திஸ் தலைவராகவும், நடிகர் ராதாரவி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏனைய பன்னிரெண்டு உறுப்பினர்களும் இவர்கள் அணியைச் சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஏற்கனவே நடிகர் சங்கத்தில் தலைவராக இருப்பவர்களே இதுவரை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கும் தலைவராக இருந்து வந்துள்ளனர்.ஆனால் இந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஜெ.கே.ரித்திஸ் அணியினர் போட்டியிட மனுத்தாக்கல் செய்ததால் தற்போது நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் விஷால் அணியினர் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய முன்வரவில்லை. அதனால் ரித்திஸ் அணியினர் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வருகிற நடிகர் சங்கத்தேர்தலிலும் இதே நிலை தான் நீடிக்கும் என்று இந்த தேர்தலில் வாக்களிக்க வந்திருந்த நடிகர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கு பயந்து தான் தேர்தலை நடத்தாமல் தள்ளி வைக்க முயற்சிப்பதாகவும் நடிகர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு தலைவரானதற்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், தொழிலதிபர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.