சினிமா
11 கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா ! சீமானுடன் சேர்ந்த விக்னேஷ் சிவன், எல்.ஐ.சி எப்போது ?
நடிகை நயன்தாரா இந்த ஆண்டிலிருந்து தனது சம்பளம் 11 கோடி என அறிவித்துவிட்டாராம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “அன்னபூரணி” படத்தின் மொத்த வசூல், இவருக்கான சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூட எட்டவில்லை என புலம்புகிறார்கள் தயாரிப்பு தரப்பினர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இவரது கணவர் விக்னேஷ் சிவன், பழமை மாறாத இயற்கை விவசாயிக்கும், கரண்ட் ட்ரெண்டில் விளையாடும் மகனுக்குமான போராட்டத்தை கதைக்களமாக வைத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.சி படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார். இவருக்கு தந்தையாக நடிக்க சீமானை அனுகிய போது, இயற்கை விவசாயி கதாபாத்திரம் என்றதும் உடனே சம்மதம் தெரிவித்தாராம் சீமான்.