தமிழகம்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம்

கடந்த டிசம்பர் மாதம், 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபாடைடிஸ் பி நோய் தொற்று இருந்த இரத்தம் செலுத்தப்பட்டது. பெரும் சர்ச்சைக்கு ஆளானது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் இந்த இரத்த மாற்றம் செய்யப்பட்டது. சிவகாசியில் தனியாக இயங்கி வரும் இரத்த வங்கியின் உதவி மூலம் இந்த இரத்தம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட விசாராணையில், அந்த ஆய்வகத்தில், ரத்த பரிசோதனையின் போது அந்த ரத்தத்தில் நோய் தொற்று இருந்ததை சரியாக கண்டறியவில்லை. இந்த விவகாரம் இப்படி இருக்கையில், சென்னையை சேர்ந்த ஒருவரும் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தத்தை தனக்கு செலுத்தியதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இரத்த தானம் செய்பவர்கள், பரிசோதனை செய்யும் போது எச்.ஐ.வி, ஹெபாடைடிஸ் சி, சைபிலிஸ், மற்றும் மலேரியா போன்ற நோய் தொற்றுகள் இருக்கிறதா என்று முதலில் சோதிப்பார்கள். இந்த நோய் தொற்றுகள் இல்லை என்ற நிலையில் தான் இரத்தம் எடுப்பார்கள்.

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் உபகரணங்கள் அனைத்தும் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வழங்கப்பட்டவை. உலக ஆரோக்கிய மையம் (WHO) விதிக்கப்பட்டிருக்கும் தரக்கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் உபகரணங்கள் தான் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனை வெளிவந்த பின்பு, அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டில் இருக்கும் உபகரணங்களின் தகுதிகள் பரிசோதிக்கப்படும் என்று தமிழ்நாடு எட்ய்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குநர் கே. செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 780 கவுன்சிலிங் மற்றும் இரத்த பரிசோதனை மையங்கள் அமைந்துள்ளன. 156 மையங்கள் பாலியல் தொடர்பாக ஏற்படும் நோய் தொற்றுகளை (Sexually Transmitted Infection/Reproductive Tract Infections) பரிசோதிக்கும் மையங்கள் உள்ளன. 288 இரத்த வங்கிகள் உள்ளன. எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளான ஆர்ட் தருவதற்கு  (antiretroviral therapy (ART)) மையங்கள் உள்ளன. எச்.ஐ.வி நோய் தடுப்பு மையங்கள் அனைத்து ஊர்புறப் பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் சம்பவத்தை தொடர்ந்து, நான்கு மைக்ரோ பையாலஜிஸ்ட்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, இதுவரை நடைமுறையில் இருந்த திட்டங்கள் மற்றும் செயல்பாட்டுகளை மறுபரிசீலனை செய்ய இருக்கிறது.

மேலும் மனிதர்கள் ஏற்படுத்தும் தவறுகள் மற்றும் உபகரணங்களில் ஏற்படும் பழுதுகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது இந்த குழு. விருதுநகர் விவகாரத்தில், மனித தவறுகள் மூலமாகவே இந்ததவறு நடைபெற்று இருப்பதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. தகுதியானவர்களை வேலைக்கு நியமிக்காத காரணங்கள் மூலமாகவே இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த பெண் தான் ரத்த பரிசோதனையில் ஈடுபட்டது. ஆனால் அவர் தவறுதலாக எச்.ஐ.வி நெகடிவ் என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்.

இரத்ததானம் கொடுத்தவர் ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு ரத்தம் கொடுத்தார். ஆனால் அதில் எச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது கண்டறிந்து பின்பு, அந்த இரத்தம் அப்புறப்படுத்தப்பட்டது. கவுன்சிலர்கள் முறையாக அவரிடம் தெரிவிக்காத காரணாத்தால் இரண்டு கவுன்சிலர்களையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

ஹெபாடைட்டிஸ் பி மற்றும் எச்.ஐ.வி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட இளைஞர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தன்னுடைய உறவினருக்கு இரத்ததானம் செய்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே அவருக்கு ரத்தம் கிடைத்ததால், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரத்தம் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. டிசம்பர் 3ம் தேதி அன்று அரசு மருத்துவமனையில் இந்த இரத்தம், கர்ப்பிணி பெண்ணிற்கு கொடுக்கப்பட்டது.

ரத்தம் பெற்றுக் கொண்ட அந்த கர்பிணி பெண், தனியார் மருத்துவமனையில் இரத்த பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவமனை அப்பெண்ணிற்கு எச்.ஐ.வி இருந்ததை உறுதி செய்தனர்.

இந்நிலையில் இரத்த தானம் கொடுத்த இளைஞர் கடந்த டிசம்பர் 26–ந்தேதி கமுதியில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரைஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த இளைஞர் திடீரென இறந்தார்.

அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் வேறு மாவட்ட அரசு டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றின் 2 மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தவும், அதனை வீடியோவில் பதிவு செய்யவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எச்.ஐ.வி. பாதிப்பால் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மருத்துவத்துறை விதித்துள்ள வழிகாட்டுதலின் படி இதற்கென ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முகத்திரை, தனி கையுறை போன்ற உபகரணங்கள் உதவியுடன் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். இவை அனைத்தும் வீடியோ மூலம் பதிவும் செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர், வாலிபரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

– நமது நிருபர்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ராஜ், “ரத்தம் மாற்றப்பட்ட சில நாட்களிலேயே எய்ட்ஸினை கட்டுப்படுத்தும் மருந்துகளை அந்த பெண்ணிற்கு கொடுக்க ஆரம்பித்துள்ளோம். தற்போதைய சூழல் படி, அப்பெண்ணின் உடலில் இருக்கும் வைரஸ்ஸின் வளர்ச்சியை குறைப்பது தான் முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். அப்பெண்ணின் பிரசவத்தினை மிகவும் பாதுகாப்புடன் மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குழந்தைக்கும் முதல் 12 வாரங்களுக்கு நெவிரப்பைன் சிரப் வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 9 பேர் கொண்ட மருத்துவர்கள் அந்த பெண்ணின் சுகாதாரம் குறித்து அறிந்து நோய் தொற்று இல்லாமல் அந்த சிசுவை வெளியே எடுக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button