மாவட்டம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிமுகவினர் !

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் கழகம் மற்றும் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வின்சென்ட் ராஜா ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில், பரமக்குடியில் அமைந்துள்ள மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், மாவட்ட முன்னாள் பதிவாளர் பாலு, மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நகர் கழக செயலாளர் ஜமால், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகரக் கழக உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.