நெருக்கடியில் பத்திரிகை சுதந்திரம்..!?
ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்கள் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் அளவையும் அத்தகைய சுதந்திரத்தை மதிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளையும் வைத்து உலக பத்திரிகை சுதந்திர குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த விவரங்களின் படி “எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள்” என்ற அமைப்பு ஆண்டு தோறும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான தரவரிசையில் இந்தியா 150 வது இடத்தில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் இந்தியா 133 வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 17 இடங்களில் சரிந்து 150வது இடத்தைப் பிடித்துள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமைகள் பறிப்பு போன்ற நிகழ்வுகள் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என கருதப்படும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளதை உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது