சுவரெங்கும் ஆபாசச்சித்திரங்கள். பராமரிப்பின்றிப் பாழடைந்த கட்டிடங்கள்
பார்த்திபனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் அவலம்…
அரசு மேல் நிலைப் பள்ளியில் பயன் பாடற்ற கட்டிடங்களை உடனடியாக அகற்றவும் பள்ளியை முறையாகப் பராமரிக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ளது பார்த்திபனூர்.இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
பார்த்திபனூர் மேல் நிலைப் பள்ளியில் காம்பவுண்டு சுவர் பல இடங்களிலும் சேதமடைந்து சரிந்து விழுந்து கிடக்கிறது. இதனால் பள்ளி வளாகத்திலேயே கால் நடைகள் எப்போதும் மேய்ச்சலுக்காக இருக்கின்றன. இங்கு இப்ப இடிந்து விழுமோ எப்படி இடிந்து விழுமோ என்னும் நிலையில் பல கட்டிடங்கள் உள்ளன இங்குக் கட்டிடங்களின் உள்ளே உள்ள சுவற்றில் ஆபாசமான ஓவியங்களும் ஆபாசமான வார்த்தைகளையும் படம் வரைந்தும் எழுதியும் வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானம் புதர் மண்டிக் காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் கால்நடைகள் மேய்கின்றன. பள்ளியில் விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படாமல் புதர் மண்டிக் காணப்படுகிறது. கூடைப்பந்து மைதானத் தரைத்தளம் முற்றிலும் முள்புதர் மண்டிச் சேதமடைந்துள்ளது.
மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கான பரிசோதனை கூடம் பெயரளவில் உள்ளது. பள்ளி எதிரே உள்ள பெண்களுக்கான விளையாட்டு மைதானம் முள்காடாக காட்சியளிக்கிறது. அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மாணவர்களுக்கு எந்தவித வசதிகளும் செய்து தரப்படாத நிலையே காணப்படுகிறது. பள்ளி மைதானம் பராமரிப்பின்றிப் புதர்மண்டிக் கிடப்பதால் விளையாட முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
விஷ ஜந்துகளின் நடமாட்டத்தாலும் விளையாட மாணவர்கள் பயப்படுகின்றனர். கிராமப் பகுதிகளிலிருந்து தேசிய, மாநில அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் திட்டம் வீணாகி வருகிறது. இந்த நிலை இங்கு மட்டும் இல்லாமல் பரமக்குடி ஆன்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் நயினார் கோவில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இதே நிலையே பல பள்ளிகளிளும் தொடர்ந்து காணப்படுகிறது இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பள்ளிகளுக்குக் காவலர்களை நியமிக்க வேண்டும், தேவையான பகுதியில் பாதுகாப்பு பணியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவும்
பெரிய அளவிளான அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றவும் முறையாகப் பள்ளிகளை ஆய்வு செய்யாமல் பார்வையிட்டு பராமரிக்காத கல்வி துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும் இது போன்ற அவலங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-நமது நிருபர்