கஜா புயலை நம்மால் எப்படி மறக்க முடியாதோ அதே போல் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை யும் புதுக்கோட்டை மாவட்ட மக்களால் மறக்க முடியாது.
கஜா புயல் கோரதாண்டவம் ஆடி ஊரே அழிவில் இருந்தது, மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, செல்ஃபோன்களில் சார்ஜ் இல்லை, சாப்பிட ஹோட்டல் இல்லை. கூலி வேலை பார்ப்பவர்கள் அன்று வேலைக்கு சென்றால்தான் சாப்பாடு, இதெல்லாம் சரியாக ஒரு மாசத்துக்கு மேல ஆகும்னு எல்லாருக்குமே தெரியும்.
ஊரே மின்சாரமின்றி கடும் இருட்டில் சுடுகாடாய் இருந்தது. அன்று இரவு யாரும் சரியாக தூங்கியிருக்க மாட்டார்கள். 5ரூபாய் மெழுகுவர்த்தி 50 ரூபாய்க்கு விற்றார்கள், கொசு வத்திகள் எங்குமே கிடைக்கல கொஞ்ச நாள் வேறு ஊருக்கு போயிறலாம்ங்கிறது தான் எல்லோரோட மனநிலையும் சனிகிழமை விடிந்தது ஆவின் பால் தேவைக்கு அதிகமாகவே அமைச்சரின் முயற்சியால் ஆவின் பூத்களில் இறக்கி விட்டார்கள், கை குழந்தை வைத்திருப்பவர்களின் கவலை தீர்ந்தது.
குடிக்க தண்ணீர் இல்லாமல் குடத்துடன் ஆண்களும் பெண்களும் அழைந்தார்கள், தண்ணீர் கேன் 300ரூபாய் வரை விற்க ஆரம்பித்து விட்டார்கள், ஏழைகளும், நடுத்தர மக்களும் செய்வதறியாது தவித்தார்கள்.
எல்லோருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைச்சர் விஜயபாஸ்கரின் சீரீய முயற்சியால் அன்று மாலை காவரி தண்ணீர் எல்லோர் வீட்டிற்குமே வந்தது. அதுவரை பண வசதி உள்ளவர்கள் சொகுசு அறைகளிலும் வீட்டில் ஜனரேட்டர் வசதியுடனும் உறங்கினார்கள் மற்றவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த போது வெளிமாவட்ட, மாநில மின்சார ஊழியர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலில் புதுக்கோட்டைக்கு வரவழைத்து களத்தில் இறக்கி விட்டார், அன்று இரவே நகர் பகுதியில் மட்டும் கரண்ட் வந்தது.. மக்கள் லைட் வெளிச்சத்தை பார்த்ததும் மகிழ்ச்சி ஆனார்கள்..
அமைச்சர் விஜயபாஸ்கரும் களத்தில் இறங்கி மின்சார ஊழியரோடு சேர்ந்து வேலை பார்க்க துவங்கினார், பின் ஊர் மக்களும், இளைஞர்களும் களத்தில் குதித்தனர். கிராமங்களில் இன்னும் சரியாக மின்சாரம் வரவில்லை என்பது அனைவருக்கும் வருத்தம் தான். ஆனாலும் 75%வரை மின்சாரம் கிடைத்ததில் மின் ஊழியர்களுக்கு தலை வணங்க வேண்டும்,நிவாரன பொருட்களை வழிமறித்து வாங்க ஆரம்பித்ததால் அமைச்சர் முதற்கட்டமாக வீட்டிற்கு 5கிலோ அரிசி வழங்கி வருகிறார். கஜா புயலுக்கு சவாலாக இயற்கையோடு போராடி இரவு பகலாக தூக்கம் தொலைத்து உதவிய தூங்கா அமைச்சருக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
– மு.சரவணகுமார்