கலைமாமணி, கவிஞர் பிறைசூடன் மறைவிற்கு முதல்வர் இரங்கல்
தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரிகளில் ஒருவரான கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து தமிழ் தியுலகமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் பிறந்து திரைத்துறையில் எம். எஸ். விஸ்வநாதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.அதன்பிறகு மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து திரைத்துறையில் தனக்கென தனியிடம் பிடித்து காலத்தால் அழியாத பாடல்களை எழுதியுள்ளார்.
சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்.ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கிய கூட்டங்களில் நடுவராக கலந்து கொண்டு சிறப்பாக பேசக்கூடியவர்.பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.சமீபத்தில் நாராயணீயம் என்னும் ஆன்மீக நூலை எழுதி வெளியிட்டார்.
வீட்டில் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென சாய்ந்து உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்ததும் தமிழ் தியுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.
கலைமாமணி கவிஞர் பிறைசூடன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.