பரமக்குடியில் இரண்டு நகரச் செயலாளர்களா ? கொதிக்கும் அதிமுகவினர்….
பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரையும் தேர்தல் பணியாற்ற அழைக்காமல் அவமதிக்கும் விதமாக செயல்பட்டு வருவதாக முத்த அதிமுக நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.
இது குறித்து அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களூம் நமது செய்தியாளரிடம் கூறுகையில்….ஏற்கனவே வன்னியர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கியதால் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக பெறுவதில் சிரமமாக உள்ளது. சிஐஏ பிரச்சனையில் அதிமுக ஆதரவு தெரிவித்ததோடு அதனை நியாயப்படுத்தி முதல்வர் பேசியதால் எப்போதும் அதிமுகவிற்கு வரும் சிறுபான்மை வாக்குகளும் முழுமையாக இந்த முறை வருவமா என்பதும் சந்தேகமே. தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வாக்கு வங்கியை கவர்வதற்காக தேவேந்திர குல வேளாளர் மசோதாவிற்கு அதிமுக உறுதுணையாக இருந்ததால் முதலியார் சமூகத்தினரும் அதிமுகவிற்கு எதிப்பு மனநிலையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த சமுதாய மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட சமுதாய பெரியோர்களையும் ,நிர்வாகிகளையும் சந்தித்து பேசி சரி செய்ய வேண்டும். இதற்கு அதிமுகவில் தேர்தல் பணியில் அனுபவம் வாய்ந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளை பயண்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தி வாக்குகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
ஆனால் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் அவ்வாறு செய்யாமல் ஏதோ இப்போதே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனது போல் இந்த சமுதாயத்தில் உள்ள இரண்டு நபர்களுக்கு கட்சியின் நகரச் செயலாளர் பதவியை பரமக்குடி நகரத்தை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் நகரச் செயலாளர் பதவி தருவதாகவும், மேலும் ஒருவருக்கு நகராட்சி தலைவர் பதிவி தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
இவர்கள் மூவரும் வேலை பார்த்தால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிடலாம் என்பது போல் சுற்றி வருகிறார் சதன்பிரபாகர்.
இன்றைக்கு இருக்கும் தேர்தல் களம் மிகவும் சவாலானது அதனை உணர்ந்து பணியாற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என்கிறார்கள்.
பரமக்குடி தேர்தல்கள நிலவரம் பற்றிய விரிவான செய்தி வரும் இதழில்….