அரசியல்

அழகிரி அன்று முதல் இன்று வரை -தொடர் 4

அழகிரி அன்று முதல் இன்று வரை தொடர் – 3

அழகிரி அன்று முதல் இன்று வரை தொடர் -2

அழகிரி அன்று முதல் இன்று வரை – தொடர் 1

அழகிரிக்கு எதிராக மதுரைக்கு நீதிகேட்டு வந்திருப்பதாகச் சொன்ன ஜெயலலிதா அழகிரியால் மதுரையின் புகழ் சீரழிந்து விட்டதாக தெரிவித்தார். வன்முறை, ரவுடியிசம், படுகொலைகளுக்கு மட்டுமே மதுரை அடையாளப்படுத்தப் படுகிறது என்ற ஜெயலலிதாவின் பேச்சு அதிர்வலைகளை கிளப்பியது.


தூங்காநகரமாக மாறிவிட்டதாகச் சொன்ன ஜெயலலிதா தமிழ்நாட்டில் இரண்டு அரசு நடப்பதாகவும் ஓர் அரசு கருணாநிதி, ஸ்டாலினாலும், இன்னொன்று அழகிரியில் நடப்பதாகவும் சொன்னார் ஜெயலலிதா. லீலாவதி கொலைவழக்கு, தினகரன் எரிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளை எல்லாம் பட்டியலிட்ட ஜெயலலிதா, தா.கிருஷ்ணன் கொல்லப்படவில்லை என்றால் அவர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு மரணமடைந்தார் என்று சொல்கிறாரா? கருணாநிதி என்றார் ஜெயலலிதா. மதுரைக்கு வர இருந்த தனக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததாக சொன்ன ஜெயலலிதா அழகிரி ஆதரவாளர்கள் அழகிரிக்கு கொடுத்த அஞ்சாநெஞ்சன் என்ற அடைமொழியையும் விமர்சித்தார்.


திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் வென்றிருந்த திமுகவிற்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் அக்னிப்பரிட்சையாக அமைந்தது. குறிப்பாக 2 நி பங்கீட்டில் திமுகவிற்கு கடும் நெருக்கடி தரப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி உடையும் சூழல் உருவானது. அப்போது திமுக பிரதிநிதிகளாக அழகிரியும், தயாநிதியும் காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் சென்று பேசினர். எதிரும் புதிருமாக இருந்த மாறன் சகோதரர்களும், அழகிரியும் சமாதானம் அடைந்திருந்தனர். கண்கள் பணித்தது, இதயம் வெடித்தது என்று சொல்லி இரண்டு குடும்பமும் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் கருணாநிதி. டெல்லி சென்ற அழகிரியும், தயாநிதியும், திமுக காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்ததோடு காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அறிவித்தனர்.

தொடரும்…

-டூயட் பாபு (எ) முகம்மது ரிலுவான்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button