இலவச மின்சாரம் : விவசாயிகள் சந்திக்க உள்ள புதிய பிரச்சனைகள்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்றபோராட்டங்களில் ஏறத்தாழ50 வரை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து பெற்றஉரிமை சுதந்திரம் கட்டணமில்லா (இலவச) மின்சாரம் 1989இல்தலைவர் கலைஞர் ஆட்சியில் கிடைத்தது.தற்போது,மத்திய அரசு விரைவில் கொண்டுவரஉத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச்சட்டத்திற்கான வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்தச் சட்ட வரைவு மாநிலஉரிமைகளுக்கு எதிரானது, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானதுஎன்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.2003ஆம்ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கானபுதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில்அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம்ஏப்ரல் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள்,கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசுகூறியிருக்கிறது. மின்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருவதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆனால்,இந்தச் சட்டத்தில் சொல்லப்படும் பல திருத்தங்கள் சர்ச்சைக்குரியவைஎன்கிறார்கள் இந்தத் துறையைக் கவனிக்கும்மின்துறை ஆர்வலர்கள். புதிய திருத்தச் சட்டத்தில்முன்வைக்கப்படும் சில திருத்தங்கள் முதலாவதாக,மின் கட்டணம் என்பது அதன்உற்பத்திச் செலவுக்கு இணையானதாக இருக்க வேண்டும்; அப்போதுதான்விநியோக நிறுவனங்களைச் சிறப்பாக நடத்த முடியும் என்கிறதுஇந்தச் சட்டம்.மேலும்,மாநிலங்களில் உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் அரசு அளிக்கும் மானியங்களைக்கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்களை நிர்ணயிக்கவேண்டும். அந்த மானியங்களை அரசுநேரடியாக நுகர்வோருக்குத் தந்துவிடலாம்.மின்சாரச்சட்டத்தின் விதிகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும்ஆணையங்களின் ஆணைகளைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவும் அபராதங்களை உயர்த்துவது இந்தச் சட்டம் முன்மொழிகிறது.புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க கொள்கைஆவணம் ஒன்றை உருவாக்க இந்தச்சட்டம் வலியுறுத்துகிறது.அரசியலமைப்புச்சட்டத்தின் படி மின்சாரம் பொதுப்பட்டியலில் வருகிறது. 2003ஆம் ஆண்டின் மின்சாரச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது, மின் கட்டணத்தை நிர்ணயிக்கும்அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு,ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இப்போது இந்த ஒழுங்கு முறைஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களையும் நேரடியாகமத்திய அரசே தேர்வுசெய்யும் வகையில்சட்டம் திருத்தப்படுவது கவலைக்குரியது; மாநிலங்களின் நலன்களுக்கு எதிரானது என்கிறார்கள் மின்துறை ஆர்வலர்கள்.இந்த புதிய சட்டத்திருத்தத்தில் கவலைக்குரியமற்றொரு விஷயம், மானியங்களைப் பணமாகக்கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது. இதுபெரும் குழப்பத்தை உண்டாக்கும். “அதாவதுதற்போது ஒரு யூனிட் மின்சாரத்தைத்தயாரிக்க 4.92 ரூபாய் செலவாகிறது. இதனைமின்வாரியம் வீடுகளுக்குக் கொடுக்கும்போது, மாதத்திற்கு முதல் 50 யூனிட் இலவசம் என்பதுஉட்பட பல்வேறு விலைகளில் விற்கிறது.500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு 6.60 காசு வரைவிற்கப்படுகிறது. அதாவது மிகக் குறைவாகப்பயன்படுத்துவோருக்கு, அடக்க விலையான 4.92 ரூபாயைவிடகுறைவான விலைக்கு மின்சாரம் கிடைக்கும். இதனால், மின்வாரியத்திற்கு ஏற்படும்இழப்பீட்டை மாநில அரசு கொடுத்துவிடும்.ஆனால், இப்போது அதனை நேரடியாகநுகர்வோருக்கே கொடுக்கச் சொல்கிறது இந்தச் சட்டம். அதுசாத்தியமே இல்லை” என்கிறார் தமிழ்நாடுமின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவரான எஸ். காந்தி.ஏனென்றால்,ஒரு நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் ஒரேமாதிரி மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. ஒரு மாதம் 50 யூனிட்டிற்குக்குறைவாகப் பயன்படுத்துவார்கள். மற்றொரு மாதம், 800 யூனிட்டிற்குமேல் பயன்படுத்துவார்கள். ஆகவே, ஒவ்வொரு மாதமும்இந்தத் தொகையைக் கணக்கிட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் எப்படிச்செலுத்த முடியும். சில இடங்களில் நான்குவீடுகளை ஒரே நபர் வைத்திருப்பார்.பணத்தை நேரடியாகக் கொடுத்தால் நான்கு வீடுகளுக்கான மின்சாரமானியமும் ஒரே நபருக்கே போய்ச்சேரும். பயன்படுத்துவோருக்கு வராது.தவிர, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.இதற்குப் பதிலாக அவர்களை மின்கட்டணம் செலுத்தச் சொல்லிவிட்டு, பிறகு அவர்கள் வங்கிக்கணக்கிற்கு பணம் அளிக்கச் சொன்னால்,அது நடக்காது. ஏற்கனவே 2003ஆம் ஆண்டில் இதனைமுயன்று பார்த்தார்கள். அப்போது தமிழ்நாட்டில் சுமார்13 லட்சம் பம்ப்செட்கள் இருந்தன. இவர்களுக்கு மணி ஆர்டர் மூலம்பணம் அனுப்பப்பட்டது. அதில் பாதி மணிஆர்டர்கள் திரும்பிவந்துவிட்டன. மீதமுள்ளவற்றிலும் பல யார் யாருக்கோபோய்ச் சேர்ந்தன. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில்கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய பம்ப்செட்கள் இருக்கின்றன. இணைப்பு யார் பெயரிலோஇருக்கும். இப்போது அவருடைய சந்ததிகள்பயன்படுத்தி வருவார்கள். ஒரே பம்ப்செட்டை இரண்டுமூன்று பேர் பயன்படுத்துவார்கள். மானியத்தைநேரடியாக அளித்தால், யாருக்குக் கொடுப்பார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார்காந்தி.தமிழக மின்வாரியத்தைப் பொறுத்தவரை இந்தச் சட்டத் திருத்தம்குறித்து இதுவரை வெளிப்படையாக ஏதும்தெரிவிக்கவில்லை. மானியத்தை நேரடியாகக் கொடுக்க முடியாது என்றுமட்டும் பதில் அளித்திருப்பதாகத் தெரிகிறது.சுருக்கமாக,இந்த மின்மசோதா 2020… பாஜக அரசை பொருத்தவரைஇனி இந்தியாவில் மாநிலங்கள் இல்லை. ஒரே நாடுஅதில் 900 மாவட்டங்கள் உள்ளன. மாநில அரசின் உரிமைகள் கல்வி,வரிவசூல், நீர்வளம் பறிபோன நிலையில் இப்போதுமின்சாரத்தின் மீதும் மத்திய அரசுகை வைத்து விட்டது.ElectricityContract Enforcement Authority (ECEA) உருவாக்கப்படும்.இந்த அமைப்பு மூலம் மின்உற்பத்தி, பகிர்மானம் & மின்கட்டணத்தை மத்திய அரசு வசூல்செய்யும்.இந்தியாமுழுமைக்கும் ஒரே மின் கட்டணம்.குஜராத்தில் 1 யூனிட் 7Rs. Slab கிடையாது.தமிழகமும் இதே கட்டணத்தை செலுத்தவேண்டி வரும்
தமிழ்நாட்டில்முதல் 100 யூனிட்டுகள் இலவசம். இந்த இலவசங்கள்இனி கிடையாது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடையாது.முதல் கட்டமாக, NTPC அனைத்து மாநிலமின் பகிர்மான கழகங்களை கைப்பற்றும். NTPC, மின் கட்டணம்வசூலிக்க தனியார்களுக்கு லைசன்ஸ் கொடுக்கும். இவ்வாறுமின்துறை தனியார் மயமாகும்.மாநில அரசு புதிய மின்உற்பத்தி நிலையங்களை கட்ட முடியாது. மாநிலஅரசிடம் உள்ள மின் உற்பத்திநிலையங்கள் கைபற்றப்பட்டு NTPC யுடன்இணைக்கப்படும். தனியார்கள் மட்டுமே புதிய மின்திட்டங்களுக்கு முதலீடு செய்யமுடியும்!– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்